Top posting users this month
No user |
மட்டக்களப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு ஒரு ஆசனம் கூட கிடைக்காது: அமீர் அலி
Page 1 of 1

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வழமையாக கிடைத்து வந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ஆசனம் இல்லாமல் போய்விடும் என ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட் தலைமையில் மீறாவோடையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தர். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றகையில்!
இருபதாவது சரத்திலே கல்குடாத் தொகுதி தனித்தொகுதியாக நிர்ணயம் செய்யப்படுகின்ற போதே முஸ்லிம்கள் ஒட்டு மொத்தமாக நூறு வீதம் வாக்களித்தாலும் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தினைப் பெறமுடியாமல் போய்விடும். கல்குடத் தொகுதியில் எழுபத்தொராயிரம் தமிழ் வாக்களும், முப்பத்தி நாலாயிரம் முஸ்லிம் வாக்குகளும் உள்ளன.
இரண்டு வாக்குகளும் சேர்ந்து தான் கல்குடாத் தொகுதி இதில் தனியாக நாம் மட்டும் வாக்களித்து எமக்குரிய பிரதிநிதித்துவத்தினைப் பெற்றுக் கொள்ள முடியாது.
கல்குடாத் தொகுதி முஸ்லிம் பிரதேசம் மிக நீண்டகாலமாக அரசியலில் முகவரி இல்லாமல் இருந்து மர்ஹம் முஹைதீன் அப்துல் காதர் பாராளுமன்றம் சென்றதன் பின்னர் அதன் மூலம் நமக்கு கிடைத்த முகவரியை தக்க வைத்துக் கொண்டோம் அதனை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் ஒட்டு மொத்த சமுகமும் இணைந்து செயற்பட்டுக் கொண்டு இருக்கின்றோம்.
அவ்வாறான செயற்பாட்டிற்கு துரோகம் செய்ய வேண்டும் என்று எவர் எவர் நினைக்கின்றார்களோ அவர்கள் இந்த பிரதேசத்திற்கும் முஸ்லிம் சமுகத்திற்கும் அனியாயம் செய்பவர்களாக இருக்கின்றார்கள் என்பது தான் உண்மை.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை தமிழ் தேசியக் கூட்டமைப்பு மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களை பெறுவது நிச்சயம். மற்றைய இரண்டு ஆசனங்களையும் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு என்பன பெறும். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வழமையாக கிடைத்து வந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ஆசனம் இல்லாமல் போய்விடும் என்றும் தெரிவித்தார்.
இக் கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் வாழைச்சேனை நியாஸ் அமீர் அலியின் வெற்றியை உறுதி செய்வதற்காக இதன்போது இணைந்து கொண்டார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum