Top posting users this month
No user |
Similar topics
தேர்தலில் தலையிட முனைகின்றனவா அந்நிய சக்திகள்?
Page 1 of 1

இலங்கையில், எதிர்வரும் ஆகஸ்ட் 17ஆம் திகதி நடக்கவுள்ள பாராளுமன்றத் தேர்தல், சர்வதேச அளவில் கவனிப்புக்குரிய ஒன்றாக மாறியிருக்கின்றது.
இந்த தேர்தலின் முடிவு எவ்வாறானதாக அமையும் என்ற எதிர்பார்ப்பு பரவலாக எழுந்துள்ளமைக்கு முக்கியமான காரணம், மஹிந்த ராஜபக்ஷவின் மீள் வருகை தான் என்பதில் சந்தேகமில்லை.
மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற முனைந்துள்ள இந்த சந்தர்ப்பத்தில், எல்லா அதிகாரத்துவ சக்திகளும், இதன் விளைவுகளை நிச்சயம் ஆய்வு செய்ய முயன்றிருக்கும் என்பதில் சந்தேகம்மில்லை.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதற்கு சீனா முற்பட்டுள்ளதான செய்திகள் வெளியாகின்றன.
இந்தியப் புலனாய்வு அமைப்பான ‘றோ‘வும் இந்த தேர்தல் மீது வெளிநாடுகளுக்கு ஏற்படடடுள்ள அக்கறையின் வெளிப்பாடாகவே குறிப்பிடலாம்.
அமெரிக்கா, இந்தியா, சீனா ஆகிய உலகின் முக்கியமான மூன்று வல்லாண்மை சக்திகளுக்கு இலங்கை ஒரு கேந்திரமாகவே இருந்து வருகிறது.
இந்த கேந்திர மையத்தில் ஏற்படும் மாற்றங்களையும் அதன் சாதக பாதகங்களை இந்த மூன்று நாடுகளும் உன்னிப்பாக அவதானிக்கின்றன.
இலங்கையில் அடுத்த மாதமும், மியன்மாரில் வரும் நவம்பர் மாதமும் நடக்கவிருக்கும் பாராளுமன்றத் தேர்தல்களின் முடிவுகள், ஆசியப் பிராந்தியத்துக்கும், உலகத்துக்கும் மிக முக்கியமான ஒன்று எனக் கருத்து வெளியிட்டிருக்கின்றார் அமெரிக்காவைச் சேர்ந்த அட்மிரல் டெனிஸ் சிபிளேயர்.
இவர் அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீடத்தின் முன்னாள் தளபதி என்பதுடன், அமெரிக்காவின் தேசிய புலனாய்வு அமைப்பின் பணிப்பாளராகவும் பணியாற்றியவர்.
இலங்கை மற்றும் மியன்மாரின் தேர்தல் முடிவுகள் ஆசியாவுக்கும் உலகிற்கும் எதற்காக முக்கியத்துவம் வாய்ந்தவை என்று அவர் "தி டிப்ளோமற்" இணையத்தளத்தில் சில காரணங்கள் முன்வைக்கிறார்.
அவை பெரும்பாலும் பாதுகாப்புக் காரணங்கள் அல்ல, வர்த்தகக் காரணிகளே.
ஆசியப் பிராந்தியம் துரித வளர்ச்சியை எட்டிவரும் நிலையில், இலங்கையும், மியன்மாரும், தெற்கு மற்றும் தென்கிழக்காசியாவிற்கான பிரதான போக்குவரத்து மையங்களாக மாறிவருகின்றன.
அரசியலுக்கு அப்பால் இவ்விரு நாடுகள் மீதும் இலாபகரமான அதிக முதலீடுகள் மேற்கொள்ளப்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.
இந்த இரு நாடுகளினதும் ஆண்டு மொத்த தேசிய உற்பத்தி ஆறு சதவீதத்திற்கும் அதிகமானது. இவற்றின் எதிர்கால நலன் கருதி திறந்த சந்தை வாய்ப்புகளும் அதிகம் காணப்படுகின்றன என்று அவர் அதற்கான காரணங்களை முன்வைத்திருகிறார்.
அதேவேளை, இந்த இரண்டு நாடுகளுக்கும் சீனாவுடன் இருக்கின்ற இராணுவசார் உறவுகளும், திட்டங்களும் இவற்றின் ஜனநாயக ஆட்சியைக் கேள்விக்குறியாக்குகின்றன என்பதையும் அட்மிரல் சி பிளேயர் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த கட்டத்தில் தான் இலங்கையின் தேர்தல் முடிவுகள் தமக்கு சாதகமான வகையில் உலக நாடுகள் இலங்கையில் நடக்கவுள்ள தேர்தல் பற்றியே அல்லது மஹிந்த ராஜபக்சவின் மீள் வருகை பற்றியோ வாய் திறக்கவேயில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
குறிப்பாக அமெரிக்கா, இந்தியா, சீனா ஆகிய மூன்று நாடுகளுமே இந்த விவகாரத்தில் இருந்து ஓதுகியிருப்பதாகவே காட்டிக் கொள்கின்றன.
வெளிப்படையாகத் தான் அவை இவ்வாறு காட்டிக்கொள்கின்ற போதிலும் இந்த மூன்று நாடுகளுமே, தமக்கு சாதகமான ஒரு அரசாங்கமே கொழும்பில் அமைய வேண்டும் என்று நிச்சயம் விரும்பும் என்பதில் சந்தேகமில்லை.
இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட ஆட்சி மாற்றம், அமெரிக்காவுக்கு சாதகமானதாக அமைந்தர், சீனாவுக்கு பாதகமாக அமைந்தது.
இந்தியாவுக்கும், சாதகமானதாகவே இருக்கிறது. எனவே மஹிந்த ராஜபக்சவின் மீள் வருகையும் இந்த நாடுகளால் உன்னிப்பாக அவதானிக்கப்படும் ஒரு விடயமாகவே இருக்கும். ஏனென்றால், மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் அதிகாரத்துக்கு வரக் கூடியதொரு நிலை ஏற்பட்டால், மீண்டும் பழைய நிலைக்கே இலங்கை திரும்ப நேரிடலாம்.
அதாவது சர்வதேச சமூகத்துடன் முட்டி மோதுகின்ற சீனாவுடன் நெருங்கி செயற்படுகின்ற ஒரு நிலை தோன்ற கூடும். அத்தகையதொரு நிலை ஏற்படுவதை அமெரிக்காவோ இந்தியாவோ விரும்பாது.
மஹிந்த ராஜபக்ஷவின் மீள் அரசியல் பிரவேசத்தையடுத்தே, சீனா அவருக்குப் பின்னால் இருப்பதாக ஒரு கருத்து அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படும் விடயமாக இருந்து வந்தது.
கொழும்பில் உள்ள சீனத் தூதரகம், மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால், அதனை சீன அதிகாரிகள் நிராகரித்திருந்தனர்.
பொதுவாகவே, உள்நாட்டு அரசியல் விவகாரங்களில் சீனா தலையிடுவதில்லை என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
பிற நாடுகளின் அரசியல் விவகாரங்களில் தலையீடு செய்யும் விடயத்தில், ஒப்பீட்டளவில், சீனா நல்ல பிள்ளையாகவே இருந்து வந்திருக்கிறது என்பது உண்மை.
உள்நாட்டு விவகாரத்தில் தலையிடாத சீனாவின் கொள்கை தான், மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கத்தை அதனுடன் மிக நெருக்கமான நிலைக்கு கொண்டு சென்றிருந்தது.
இப்போது, மஹிந்த ராஜபக் ஷவை வெற்றிபெற வைப்பதற்கு சீனா பெரும் பிரயத்தனம் செய்வதாக வெளியாகும் செய்திகளை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் நிராகரித்திருக்கிறார்.
இத்தகைய கீழ்த்தரமான வேலைகளில் சீனா ஈடுபடும் என்றும் தாம் நம்பவில்லை என்று அவர் பேட்டி அளித்திருக்கிறார்.
அதேவேளை, ஜனாதிபதி தேர்தலில், மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்கான பிரசாரங்களுக்கு 149 மில்லியன் ரூபாவை சீன நிறுவனம் ஒன்று வழங்கியது குறித்து குற்றப்புலனாய்வுப் பிரிவு விசாரிக்கிறது.
அதையும் குறிப்பிட்ட நிறுவனம் மறுத்திருக்கிறது. எவ்வாறாயினும், இலங்கையில் கால்வைத்துள்ள சீன நிறுவனங்கள் மஹிந்த ராஜபக்ஷவின் தோல்விக்குப் பின்னர், வெலவெலத்துப் போயிருக்கின்றன.
இப்போதைய அரசினால் நிறுத்தி வைத்திருக்கின்ற தமது திட்டங்களை மீள ஆரம்பிப்பது மற்றும் புதிய திட்டங்களில் முதலீடு செய்வதற்கு மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தால் நல்லது என்று சீன நிறுவனங்கள் கருதுகின்றன.
எனவே, தமது வணிக நலன் கருதி, மஹிந்த ராஜபக்ஷவுக்காக சீன நிறுவனங்கள் பணியாற்றக் கூடும். எவ்வாறாயினும், அதனை வெளிப்படுத்துவதற்கு இப்போதைய அரசாங்கம் கொஞ்சம் தயக்கம் காண்பிக்கலாம்.
ஏனென்றால் அது, சீனாவுடனான இலங்கையின் உறவுகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தி விடக் கூடியது.
அடுத்து, இந்தியப் புலனாய்வுத்துறையான 'றோ'வும், இலங்கையின் தலையீடுகளை மேற்கொள்வதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்றன. குறிப்பாக சிங்கள ஊடகங்களில் தான் இத்தகைய செய்திகள் அதிகம் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன.
மஹிந்த ராஜபக் ஷவை மீண்டும் அதிகாரத்துக்கு கொண்டு வரும் முயற்சியில் இந்தியப் புலனாய்வுத்துறை ஈடுபாடு காட்டிவருவதாகவும் செய்திகள் வெளியாகின்றன.
ஆனால், இதன் அடிப்படை ஆதாரங்கள் கேள்விக்குரியவை. தர்க்க ரீதியாகவும் சரி, ஒப்பீட்டு ரீதியாகவும் சரி, மஹிந்த ராஜபக் ஷவை இந்தியா ஊக்குவிப்பது அல்லது மீண்டும் அதிகாரத்துக்கு கொண்டு வர முனைவது ஆபத்தானது.
இலங்கையில் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இருப்பது சீனாவின் நலன்களை முதன்மைப்படுத்தவும், இந்திய நலன்கள் ஓரம்கட்டப்படவும் வாய்ப்பாக அமையும்.
அதேவேளை, ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் இந்தியாவுக்கு போதிய ஒத்துழைப்பு அளிக்கும் ஒன்றாகவே இருக்கிறது.
இந்தியாவுக்கு தலைவலியைக் கொடுக்கின்ற எதையும் செய்யத் தயாராகவும் அது இல்லை. இப்படியான நிலையில், மஹிந்த ராஜபக் ஷவை விட ரணில், இந்தியாவைப் பொறுத்தவரையில் ஆபத்தான ஒருவரல்ல.
அதைவிட தன்னைத் தோல்விக்குள் தள்ளிச் சென்றதில் இந்தியாவின் 'றோ' புலனாய்வு அமைப்புக்கும் பங்கிருப்பதாக மஹிந்த ராஜபக் ஷவே குற்றம்சாட்டியிருந்தார்.
எனவே, இந்தியப் புலனாய்வு அமைப்புகள் அவருக்காக பணியாற்றுகின்றன என்று வெளியாகும் செய்திகளின் உள்நோக்கம் கேள்விகளை எழுப்ப வைக்கிறது.
எவ்வாறாயினும், இந்த தேர்தலையும் இதன் பின் விளைவுகளையும் இந்தியப் புலனாய்வு அமைப்பு கண்காணிக்காது ஆராயாது இருக்கும் என்று கூற முடியாது.
அது அவர்களின் கடமை. அது நிகழ்ந்தாலும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவானதாக இருக்கும் என்று நம்புவது கடினமானது.
அடுத்து அமெரிக்காவும் கூட இலங்கை மீது உன்னிப்பாக கண்காணிப்பை வைத்திருக்கிறது. இப்போதைய அரசாங்கத்தின் மீது அமெரிக்காவுக்கு முழு நம்பிக்கையும் இருக்கிறது.
ஆனால், கடந்த காலங்களைப் போன்று அமெரிக்கா வெளிப்படையான தலையீடுகள் எதையும் செய்வதாகத் தெரியவில்லை. ஆனால், ஆட்சிமாற்றத்தை அமெரிக்கா ஆதரி க்காது. ஏனென்றால், மஹிந்த ராஜபக் ஷவை பதவியில் இருந்து அகற்றுவதில் அமெரிக்கா வும் குறிப்பிட்ட பங்காற்றியது.
மஹிந்த ராஜபக்ஷ அதிகாரத்தில் இருக்கும் வரையில் அமெரிக்காவின் நலன்கள் இலங் கையில் பாதுகாக்கப்படாது என்று அது நம்புகிறது. எனவே, அமெரிக்கா இந்த தேர்த லின் பெறுபேறுகளை மிக உன்னிப்பாக அவதானிக்கும்.
ஒருவேளை இரகசிய மதிப்பீடுகளில் தனக்கு பாதகமான நிலை தென்பட்டால், அதற்கேற்ற மாற்று நகர்வுகளை அமெரிக்கா கையாளவும் கூடும். இந்த தேர் தல் இலங்கையின் தலைவிதியை மட்டும் தீர்மானிக்கும் ஒன்றாக அமையவில்லை.
இது உலக நாடுகள் பலவற்றின் இராணுவ, பொருளாதார, அரசியல் உறவுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதொரு தேர்தலா கவே அமைந்திருக்கிறது,
உலக வரைபடத்தில் இலங்கை ஒரு சிறுபுள்ளியாகவே இருந்தாலும், இந்த வகையில் அது கடுகின் காரத்துடன் தான் இருக்கிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இலங்கை விவகாரத்தில் தலையிட வேண்டாம்: சர்வதேசத்திடம் தென் ஆபிரிக்கா வேண்டுகோள்
» அமானுஷ சக்திகள்(500 குறிப்புகள்)
» பொதுத் தேர்தலில் போட்டியிடுவேன்: மஹிந்த
» அமானுஷ சக்திகள்(500 குறிப்புகள்)
» பொதுத் தேர்தலில் போட்டியிடுவேன்: மஹிந்த
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum