Top posting users this month
No user |
தமிழ் மக்களின் தெளிவும் மெளனமும்....திண்டாடும் அரசியல்வாதிகளும்
Page 1 of 1

தேர்தல் வேட்பு மனு கொடுக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை தேர்தல் திருவிழா கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்துவரும் அரசியல்வாதிகள், பல மில்லியன் ரூபாய்கள் செலவு செய்து கூட்டங்கள், விளம்பரங்கள் என்றும் உணவு உறக்கம் இன்றி நாடு முழுவதும் அலைந்து திரியும் நிலையில் கருத்து மோதல், கட்சித் தகராறு என்பதையே காணக்கூடியதாக இருக்கின்றது.
இந்நிலையில் வடக்கு கிழக்கு மற்றும் ஏனைய பகுதிகளில் வாழும் தமிழ் மக்களோ அலட்டிக்கொள்ளாது தங்களின் நாளாந்த கடமைகளில் கவனத்தை செலுத்திக் கொண்டு இருப்பதையும் காண முடிகின்றது.
ஒவ்வொரு அரசியல் வாதிகளும் கூட்டங்களை நடாத்தவும் அதற்கான செலவுகளையும் கண்களை மூடிக்கொண்டு ஏட்டிக்கு போட்டியாக செலவு செய்வதை காணக்கூடியதாக உள்ளது.
ஆனால் சிலரே அந்த கூட்டத்திற்கு செல்வதை ஏதோ மறுக்க முடியாது செய்வதாகவே உள்ளது. ஆனால் தமிழ் மக்கள் மிக தெளிவாக யார் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை தீர்மானித்து விட்டதை வெளிக்காட்டாது. அரசியல் வாதிகளை அலைச்சல் படுத்தி வருகின்றார்கள்.
இப்பொழுது தமிழ் மக்கள் எடுத்திருக்கின்ற தீர்மானங்களை அவர்கள் வெளிக்காட்டாமல் இருந்தாலும் அவர்கள் கூறும் கருத்துக்களில் இருந்து யாரை ஆதரிக்க போகின்றார்கள் என்பதை அனுமானிக்க கூடியதாக உள்ளது.
இது வடக்கு - கிழக்கு மக்களை மாத்திரம் அல்லாது, ஏனைய மக்களுக்கும் மனரீதியான தொடர்பு எப்படி ஒரே எண்ணங்களை ஏற்படுத்தியுள்ளது என்று பார்த்து ஆச்சரியப்படுகின்றோம்.
நடைபெறும் கூட்டம், கூத்துக்கள் அனைத்தும் அரசியல்வாதிகள் இதுவரை நேர்மையற்ற முறையில் சேர்த்த பணத்தை செலவு செய்ய மக்கள் கொடுத்த ஆணையாகவே உள்ளது.
இப்போதைய மக்களின் தெளிவான சிந்தனை மாற்றம் பல அதிர்ச்சி முடிவுகளை தரலாம்.தேர்தல் நிலவரம் பல மாற்றங்களை ஏற்படுத்தப்போவது நிச்சயம் என்பதே இந்த வார தேர்தல் களத்தின் உண்மை நிலையாகும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum