Top posting users this month
No user |
இரவில் தனியாக வரச்சொல்லி மிரட்டிய பொலிஸ் இன்ஸ்பெக்டர்: இளம்பெண் தற்கொலை முயற்சி
Page 1 of 1

திருச்சியில் தற்கொலைக்கு முயன்ற இளம்பெண் ஒருவர், தன்னை இரவு நேரத்தில் தனியாக வரச்சொல்லி பொலிஸ் இன்ஸ்பெக்டர் மிரட்டல் விடுத்ததாக கடிதம் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீரங்கத்தை சேர்ந்த தனபால் என்பவரது மகள் கார்த்திகாதேவி (23), மாமியாருடன் ஏற்பட்ட நிலப் பிரச்சனையால் கணவர் மணிகண்டனை பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் தனபால் தனது நிலத்தை திருப்பி தருமாறு மணிகண்டனிடம் கேட்டபோது அவர் திருப்பி தராததால், காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் பேச்சுவார்த்தை நடத்தியபோது, குத்தகைக்கு கொடுத்த ரூ.3 லட்சம் பணத்தை திருப்பி கொடுத்தால் நிலத்தை தருவதாக மணிகண்டன் கூறியுள்ளார்.
பின்னர் ரூ.3 லட்சம் பணத்தை கடந்த ஏப்ரல் மாதம் தனபால், மணிகண்டனிடம் கொடுத்தும், அவர் நிலத்தை திருப்பி கொடுக்கவில்லை.
எனவே தனபால் காவல் நிலையத்திற்கு சென்றபோது மணிகண்டனிற்கு ஆதரவாக பொலிசார் பேசியதோடு, தனபால் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும் கார்த்திகா தேவியை மணிகண்டனின் சகோதரர்கள் மிரட்டியதுடன் காரில் கடத்தி செல்ல முயன்றதாகவும் கூறப்படுகிறது.
இதில் மனம் உடைந்த கார்த்திகா தேவி ஒரு கடிதத்தை எழுதி வைத்துவிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
தற்போது அவரை தென்னூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கார்த்திகா தேவி எழுதிய கடிதத்தில், எனது தந்தையின் சொத்தை கணவருக்கு எழுதி கொடுக்கும்படி இன்ஸ்பெக்டர் மிரட்டல் விடுக்கிறார்.
இரவு நேரத்தில் தொலைபேசி மூலம் தொந்தரவு செய்வதுடன், விசாரணைக்கு தனியாக வர சொல்கிறார்.
அப்பாவையும், அண்ணனையும் சிறையில் தள்ளி விடுவேன் என்று மிரட்டுகிறார்.
மேலும், என் இறப்புக்கு இன்ஸ்பெக்டர் தான் காரணம் என்று தெரிவித்துள்ளார்.
தற்போது இது குறித்து ஸ்ரீரங்கம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum