Top posting users this month
No user |
வேட்பாளர்கள் வாக்காளர்களை அழைத்து உபசரிக்கக் கூடாது!– தேர்தல் செயலகம்
Page 1 of 1

வேட்பாளர்கள் வாக்காளர்களை அழைத்து உபசரிப்புக்களை வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் ஆர்.எம்.எல். ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வாக்காளர்கள் அல்லது அரச உத்தியோகத்தாகளை வீட்டுக்கு அழைத்து உபசரிப்பது, எதிர் வேட்பாளர்கள் பற்றி போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்துவது ஆகியன தடை செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் அடுத்த வாரத்தில் வெளியிடப்பட உள்ளது.
சுற்றாடலுக்கு தீங்கு ஏற்படுத்தக் கூடிய பிரச்சாரங்களும் தடை செய்யப்பட்டுள்ளன.
வேட்பாளர்களுக்கான ஒழுக்க விதிகளை அனைத்து கட்சிகளும் ஏற்றுக்கொண்டுள்ளன.
வேட்பாளர்களுக்கான ஒழுக்க விதிகள் பற்றி 2012ம் ஆண்டு முதல் பேசப்பட்டாலும் அது அமுல்படுத்தப்படவில்லை.
எனினும் இந்த ஆண்டு தேர்தலின் போது இந்த ஒழுக்க விதிகள் வர்த்தமானி ஊடாக அறிவிக்கப்பட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
எவ்வாறெனினும் ஒழுக்க விதியாக இது அறிவிக்கப்பட்ட போதிலும் இதனை ஓர் சட்டமாக கருதப்பட முடியாது என மேலதிக தேர்தல் ஆணையாளர் ஆங்கில பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum