Top posting users this month
No user |
மனைவியை கொலை செய்தவருக்கு ஐந்து வருட சிறை தண்டனை! பத்தாயிரம் ரூபா தண்டம்
Page 1 of 1

திருகோணமலை, கும்புறுப்பிட்டி பிரதேசத்தில் 2012ம் ஆண்டு மனைவியை பொல்லால் தாக்கி கொலை செய்த கணவருக்கு இன்று வெள்ளிக்கிழமை திருகோணமலை உயர் நீதிமன்றம் ஐந்து வருட கால சிறைத் தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் தண்டப்பணமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
அத்துடன் தண்டப்பணமான 10 ஆயிரம் ரூபாவை செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் ஒருமாத காலம் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் நீதவான் தனது தீர்ப்பில் தெரிவித்தார்.
திருகோணமலை கும்புறுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரம் கோகிலன் வயது (40) என்பவருக்கே இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2012ம் ஆண்டில் தனது மளைவி வேறு ஒரு ஆணுடன் உறவில் ஈடுபட்டிருந்த வேளை அதனைக்கண்டு மனைவியை பொல்லால் தாக்கி கொலை செய்ததாக சந்தேக நபருக்கெதிராக திருகோணமலை உயர்நீதிமன்றில் பொலிஸாரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
சந்தேக நபர் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டமையால் திருகோணமலை உயர்நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரன் குறித்த தண்டனையை விதித்து தீர்ப்பளித்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum