Top posting users this month
No user |
Similar topics
அன்று வெல்வதற்கு வேட்பாளர் இன்று தோற்பதற்கு வேட்பாளர்
Page 1 of 1

தொகுதி அடிப்படையிலான தேர்தல் முறைமை இருந்த காலத்தில் ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் அந்தந்த இடத்தைச் சேர்ந்தவர்கள் தேர்தல் களத்தில் குதிப்பர்.ஊர் அறிந்த தொகுதி அறிந்த மக்களின் செல்வாக்குப் பெற்ற தலைவர்கள் தேர்தல் களத்தில் குதித்து கடும் பிரச்சாரம் செய்வர்.
இதனால் தங்கள் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர் யார்? என்பதை அந்தந்த தொகுதி மக்கள் அனைவரும் அறிந்து வைத்திருந்தனர். அந்த நிலைமை மலையேறி விட்டது. இருபதாவது திருத்த சட்டமூலம் நடைமுறைக்கு வந்தால், தொகுதிவாரித் தேர்தல் முறை கொண்டு வரப்படும் என்ற போதிலும் அந்தச் திருத்தச் சட்டமூலம், கூடவே சிறுபான்மை மக்களுக்குப் பாதகமாக அமையும் என்ற துன்பத்தையும் கொண்டிருந்ததால் அதைப்பற்றி அக்கறை கொள்வதற்கான சந்தர்ப்பம் இல்லாமல் போயிற்று.
ஒரு நல்ல நடைமுறையை விகிதாசாரப் பிரதி நிதித்துவம் சாகடித்ததையிட்டுக் கவலை கொள்வதைத் தவிரவேறு எதைத்தான் நாம் செய்யமுடியும்? இப்போது இருக்கின்ற நடைமுறையில் எங்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் யார்? அவர்கள் இன்னமும் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கின்றனரா? சிலமனைக் காணவில்லையே இது போன்ற பேச்சுக்களே மக்களிடம் உள்ளன.
மக்களின் பிரதிநிதியான பாராளுமன்ற உறுப்பினர் என்ற பதவி மிகவும் பெறுமதியானது. எனினும் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையில் ஒரு பெறுமதியான பதவி; அந்தப் பதவியில் இருப்பவருக்கு நன்மை என்பதைத் தவிர, பொதுமக்களுக்கு அவர்களால் பிரயோசனம் இல்லை என்பதே யதார்த்தம்.
விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறையில் எங்களின் மக்கள் பிரதிநிதி யார்? என்பதை முழுமையாகத் தெரிந்து கொள்ள முடியாத பாதக நிலைமை உருவாகியது என்பது மட்டுமன்றி,இப்போது இன்னுமொரு பெரும் பிரச்சினையும் இந்த முறைமை ஊடாக ஏற்பட்டுள்ளது.
அதாவது தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் தத்தம் கட்சிகள் வெற்றியடைய வேண்டும் என்பதை விட, தாம் தாம் வெல்ல வேண்டும் என்பதிலேயே முழுக்கவனத்தையும் செலுத்தி வருகின்றன.
அதாவது தனது கட்சியில் மக்கள் செல்வாக்கு நிறைந்தவர்களை வேட்பாளர்களாக்கினால், தமக்கு எம்.பி பதவி கிடைக்காமல் போய்விடும் என்பதற்காக, தேர்தலில் தங்களைத் தவிர யார் வெல்ல முடியாதவர்களோ அவர்களை வேட்பாளர் ஆக்குவது என்ற மிகக்கொடுமையான நிலைமை தோன்றியுள்ளது.
இது என்ன புதுக்கதை என்று நினைத்து விடாதீர்கள். பிரபல்யமான தவில் நாதஸ்வரக்குழு யாருடைய பெயரை கொண்டுள்ளதோ அந்தக் குழுவின் தலைமை வித்துவான் தன்னைவிடக் கூடுதலாக-சிறப்பாக வாசிக்கக்கூடிய தவில், நாதஸ்வர வித்துவான்களை தனது கோஷ்டியில் வைத்திருப்பதில்லை.
இதுபோலத்தான் இப்போது எங்கள் மண்ணில் வேட்பாளர்களுக்கு அனுமதி கொடுக்கும் அரசியல் கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் இறைவா! இவர்கள் தோற்க வேண்டும். நான் வெல்ல வேண்டும் என்ற பிரார்த்தனையோடு வேட்பாளர் பதவியை கொடுக்கின்றனர்.
மக்கள் பிரதிநிதிகள் என்ற உயரிய பதவியில்-தெரிவில் மேளக்கோஷ்டி நடைமுறை அமுலுக்கு வந்துவிட்டது என்றால், நாங்கள் என்ன செய்ய முடியும்? நாம் தமிழர். எங்களை சிங்களவர்கள் ஏமாற் றுவார்கள்; முஸ்லிம்கள் ஏமாற்றுவார்கள்; உலக நாடுகள் ஏமாற்றும்; ஐ.நா சபை போன்ற அமைப்புகள் ஏமாற்றும். இதைவிட, தமிழனைத் தமிழன் ஏமாற்றுவது இருக்கிறதே! அதற்கு நிகராக யாருமே ஏமாற்ற முடியாது. அந்தளவுக்கு எங்களை நம்பவைத்து ஏமாற்றி ஏதிலிகளாக நடுவீதியில் விட்டுவிடுவார்கள். இறைவா! நீயே காத்தருள்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நாட்டின் துக்க நாளான மே 18 அன்று அஞ்சலி செலுத்துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்!
» ஜனாதிபதி தேர்தல் அன்று இரவு அலரி மாளி்கையில் இடம்பெறவிருந்த சூழ்ச்சி! முன்னாள் இராணுவ தளபதியின் விளக்கம்
» ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் வளர்மதி வெற்றி!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum