Top posting users this month
No user |
முருகன், சாந்தன், பேரறிவாளன் வழக்கு விசாரணை அடுத்த வாரம் ஒத்திவைப்பு
Page 1 of 1

முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உட்பட 7 பேரின் விடுதலையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பான இறுதி விசாரணைகள் ஜூலை 21ம் திகதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரண தண்டனை, கருணை மனு மீதான தாமதத்தை காரணம் காட்டி கடந்த ஆண்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
இதையடுத்து, தண்டனை அனுபவித்த காலத்தை கருத்தில் கொண்டு அவர்களை விடுவிக்க தமிழக அரசு முடிவெடுத்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்குத் தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கு விசாரணை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது. சில மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட இந்த வழக்கு தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்வில் நீதிபதிகள் இப்ராஹிம் கலிபுல்லா, பி.சி.கோஷ், யு.யு.லலித், ஏ.எம்.சப்ரே ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, வழக்கு விசாரணையை வரும் 21ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், இன்றைய தினம் மரண தண்டனைக்கு எதிரான அனைத்து வழக்குகள் மீது விசாரணை நடைபெறும் என்றும், அதுவரை 3 பேரின் விடுதலைக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்றும் தெரிவித்தனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum