Top posting users this month
No user |
சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு இன்று கூடுகிறது - மைத்திரியின் உரைக்கு பதிலளிக்கும் ஐ.ம.சு.முன்னணி
Page 1 of 1

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விசேட மத்திய செயற்குழு இன்று இரவு அவசரமாக கூடவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்றிரவு ஆற்றப்பட்ட விசேட உரையினை அடுத்து, சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுவை கூட்டுமாறு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதற்கமைய இன்று இரவு 08 மணிக்கு இடம்பெறவுள்ள மத்திய செயற்குழுவில் ஜனாதிபதியின் விசேட உரை தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாகவும் சுதந்திர கட்சியின் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
மைத்திரியின் உரைக்கு ஐ.ம.சு.முன்னணி பதிலளிக்கும்: தினேஷ் குணவர்தன
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று ஆற்றிய விசேட உரை தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இன்று விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதான தேர்தல் பிரசாரக் குழு இன்று பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் தேர்தல் பிரசாரங்கள் குறித்து ஆராய முன்னணியின் தலைவர்கள் இன்று சந்திக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட இருப்பதாகவும் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவரான ஜனாதிபதி மைத்திபால சிறிசேன, தேர்தலில் நடு நிலை வகிக்க போவதாக நேற்று அறிவித்திருந்தார்.
அத்துடன் மகிந்த ராஜபக்ச தொடர்பில் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் கொண்டிருந்த அதே நிலைப்பாட்டிலேயே தான் இருப்பதாகவும் மகிந்தவுக்கு எதிராக நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை எனவும் ஜனாதிபதி கூறியிருந்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை தான் பலவந்தமாக பெறவில்லை எனவும் மகிந்தவே முன்வந்து கட்சியை ஒப்படைத்ததாகவும் பின்னர் பணிகளை செய்யவிடாது மகிந்த காலை பிடித்து இழுத்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேர்தலில் வெற்றி பெற்றாலும் மகிந்த ராஜபக்சவை விட பிரதமர் பதவிக்கு தகுதியான சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.
மைத்திரிபால சிறிசேனவின் இந்த கருத்துக்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றியில் பாதிப்பை ஏற்படுத்தும் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக அந்த முன்னணியின் தலைவர்கள் இன்று அவசரமாக கூடி ஆராயவுள்ளதாக தெரியவருகிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum