Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


டக்ளஸ் பெரிய கோடீஸ்வரர்! போட்டு உடைத்தார் ஈ.பி.டி.பி பிரமுகர்!

Go down

டக்ளஸ் பெரிய கோடீஸ்வரர்! போட்டு உடைத்தார் ஈ.பி.டி.பி பிரமுகர்! Empty டக்ளஸ் பெரிய கோடீஸ்வரர்! போட்டு உடைத்தார் ஈ.பி.டி.பி பிரமுகர்!

Post by oviya Wed Jul 15, 2015 2:48 pm

டக்ளஸ் தேவானந்தா ஒரு கோடீஸ்வரர்தான். இவர் வைத்திருக்கின்ற கோடீஸ்வர செல்வம் மக்களாகிய நீங்களே. என எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடுகின்ற சமூக சேவையாளர் சொல்லின் செல்வர் இரா. செல்வவடிவேல் தெரிவித்தார்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியால் நடத்தப்படுகின்ற மகேஸ்வரி பவுண்டேசன் நிறுவனம் உண்மையில் மக்கள் சேவை நிலையமே ஆகும், மாறாக மணல் கொள்ளை நிறுவனம் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

இவர் வட்டுக்கோட்டையில் துணவி கிராமத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசியபோதே இவ்வாறு கூறினார்.

இவர் மேலும் தெரிவித்தவை வருமாறு-

யாழ். போதனா வைத்தியசாலையில் தொண்டர்களாக கடமையாற்றி வந்தவர்களை நிறுத்த அரசாங்கம் தீர்மானம் எடுத்தது.

இத்தொண்டர்களில் அநேகர் வறிய குடும்பங்களை சேர்ந்தவர்கள்,யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள், பெண்கள் ஆவர். இந்நிலையில் இவர்களுக்கான ஊதியத்தை மனிதாபிமான அடிப்படையில் கொடுத்து இவர்களை வைத்தியசாலையில் தொடர்ந்து வைத்திருப்பது என எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தீர்மானம் எடுத்தார்.

ஒரு வருட காலம் இவர்களுக்கான ஊதியம் மகேஸ்வரி பவுண்டேசனாலேயே வழங்கப்பட்டது. சுமார் ஒரு இலட்சம் ரூபாய் வரையில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

டக்ளஸ் தேவானந்தா விரும்பி இருந்தால் கோடீஸ்வரராக மாறி ஆடம்பரமாக வாழ்ந்து இருக்கலாம். ஆனால் காட்சிக்கு எளிமையான தோற்றத்துடன் தோன்றுகின்றார். மக்களை நேரில் சந்தித்து குறைகளை செவிமடுத்து நிவாரணம் பெற்றுக் கொடுக்கின்ற மிக எளிமையான அமைச்சர் உலகத்திலேயே இவர் ஒருவர் மாத்திரமே ஆவார்.

இவரும் ஒரு கோடீஸ்வரர்தான். இவர் வைத்திருக்கின்ற கோடீஸ்வர செல்வம் மக்களாகிய நீங்களே.

டக்ளஸ் தேவானந்தாவுக்கு எந்தவொரு சமயச் சார்பும் கிடையாது. இவரின் தெய்வங்கள் மக்களே. மக்கள் சேவையே இவரின் சமயம் ஆகும்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum