Top posting users this month
No user |
பாரிய ஊழல், மோசடிகள் தொடர்பில் நாளை விசாரணைகள் ஆரம்பம்
Page 1 of 1

பாரிய ஊழல், மோசடிகள் தொடர்பாக விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு நாளை முதல் சாட்சியங்களிடம் விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் இதுவரை ஆணைக்குழுவிற்கு 820 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதுடன் அவற்றில் 115 முறைப்பாடுகளை விசாரணைக்கு உட்படுத்த வேண்டியுள்ளது.
சுமார் 60 முறைப்பாடுகள் குறித்து விசாரணை நடத்த விசேட காவற்துறை பிரிவின் உதவி பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.
2010ம் ஆண்டு ஜனவரி 10ம் திகதி முதல் 2015ம் ஆண்டு ஜனவரி 10ம் திகதி வரையான காலப்பகுதியில் நடந்தவை தொடர்பில் விசாரணை நடத்தப்படவுள்ளது.
5 பேர் கொண்டு ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியங்கள் விசாரிக்கப்பட உள்ளதுடன் ஐவர் கொண்ட இந்த ஆணைக்குழுவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த மார்ச் மாதம் நியமித்தார்.
ஆணைக்குழுவில் பிரிதி சூரியசேன, அமிந்த சேனவிரத்ன, விக்கும் களுஆராச்சி, கியான் குலதுங்க, முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் பி.ஏ. பிரேமதிலக்க ஆகியோர் உள்ளடங்களியுள்ளனர்.
பாரதூரமான ஊழல், மோசடிகள், அரச சொத்துக்கள், அரச பலம் மற்றும் அரச அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியமை சம்பந்தமாக ஆணைக்குழு விசாரணை நடத்தும் என அதன் செயலாளர் எல். சில்வா தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum