Top posting users this month
No user |
Similar topics
தேயிலை தொழிற்சாலைகளை மூட முதலாளிமார் சம்மேளனம் தீர்மானம்
Page 1 of 1
தேயிலை தொழிற்சாலைகளை மூட முதலாளிமார் சம்மேளனம் தீர்மானம்
மலையகத்தில் மெதுவாக பணி செய்யும் போராட்டத்தில் தொடருமாக இருந்தால் 23 கம்பனிகளை சேர்ந்த தோட்ட உத்தியோகஸ்தர்கள் மற்றும் தோட்ட அதிகாரிகள் நாளைய தினம் வேலைக்கு செல்வதில்லை எனவும் தேயிலை தொழிற்சாலைகள் தற்காலிகமாக மூடப்படும் எனவும் முதலாளிமார் சம்மேளனம் தீர்மானம் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொழிற்சாலைகள் தற்காலிகமாக மூடுவது தொடர்பாக கம்பனிகளின் வேண்டுக்களுக்கிணங்கவே முதலாளிமார் சம்மேளனம் இவ்வாறு தீர்மானித்துள்ளனர்.
இவ்வாறு தற்காலிகமாக தொழிற்சாலைகள் மூடுவது தொடர்பாக பெருந்தோட்ட கம்பனிகளுக்கும், கூட்டு ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனம் அறிவித்துள்ளதாக தோட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அத்தோடு இரண்டாவது நாளான நேற்று தோட்ட தொழிலாளர்கள் மெதுவாக பணி செய்யும் போராட்ட நடவடிக்கையில் ஈடுப்பட்டு வந்தனர்.
நேற்றைய தினமும் தோட்ட தொழிலாளர்கள் 5 கிலோ, 2 கிலோ மாத்திரமே கொழுந்து பறித்திருக்கின்றார்கள் என தெரியவந்துள்ளது.
அத்தோடு டயகம பிரதேசத்தில் தொழிலாளர்கள் கொழுந்து பறிக்கும் போது 1000 ரூபா சம்பளம் வேண்டும் என கோரி பாதாதைகளை தேயிலை தோட்டத்தில் ஏந்தி காட்சிப்படுத்தியவாறு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.
நான்கு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதிலும் தோட்ட முதலாளிமார் சம்மேளனம் இதற்கு இணக்கம் தெரிவிக்காததையடுத்து கடந்த ஆறாம் தினம் தோட்ட தொழிலாளர்களை மெதுவான பணிகளில் ஈடுப்படுமாறு தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மலையக பகுதிகளில் குறிப்பிட்ட பல தோட்டங்களில் தொழிற்சங்க பேதமின்றி இவ்விடயத்தில் தொழிலாளர்கள் ஈடுப்பட்டுள்ளனர். இதேவேளை மலையகத்தில் உள்ள சில தோட்ட தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுப்படவில்லை என தெரியவருகின்றது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தேயிலை தொழிற்சாலையில் தீ விபத்து: இராகலையில் சம்பவம்
» ஒரு தேயிலை செடியை கூட பிடுங்க அனுமதிக்காத மகிந்தவும்! மாடிவீட்டுக்கு விளக்கம் தரும் தொண்டமானும்
» குற்றமற்றவர்களை கொண்டு பொதுத்தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும்!- வர்த்தக சம்மேளனம்
» ஒரு தேயிலை செடியை கூட பிடுங்க அனுமதிக்காத மகிந்தவும்! மாடிவீட்டுக்கு விளக்கம் தரும் தொண்டமானும்
» குற்றமற்றவர்களை கொண்டு பொதுத்தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும்!- வர்த்தக சம்மேளனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum