Top posting users this month
No user |
Similar topics
எமகண்டமாகியுள்ள மஹிந்தவின் மறுபிரவேசம்
Page 1 of 1
எமகண்டமாகியுள்ள மஹிந்தவின் மறுபிரவேசம்
மஹிந்த ராஜபக்சவின் அரசியல் மறுபிரவேசம் இலங்கையின் அரசியல் களத்தை பெரும் குழப்பத்துக்குள் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.
பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை ஆரம்பிக்கவுள்ள நிலையில் கூட, கட்சிகளின் நிலைப்பாடுகள் குறித்து தெளிவான தீர்மானங்களை எடுக்க முடியாது திண்டாடுகின்ற ஒரு நிலை ஏற்பட்டிருக்கிறது.
இதற்கு மஹிந்த ராஜபக்சவின் அரசில் மறுபிரவேசமே காரணம். மஹிந்த ராஜபக்சவை மீண்டும் அரசியலுக்கு வர முடிவு செய்திருக்காது போயிருந்தால், எல்லாமே சுமுகமாகவே நடந்தேறியிருக்கும்.
ஆனால், தேர்தல் களம் இந்தளவுக்கு சூடேறியிருக்காது, சுவாரஷ்யம் கொண்டதாக மாறியிருக்காது. பெரும்பாலான கட்சிகள் கூட்டணி அமைக்கும் வாய்ப்புகளை உதறிவிட்டு தமது பலத்தைக் காட்ட தனித்தனியாக களமிறங்கியிருக்கும்.
அது நீண்ட காலத்துக்குப் பின்னர், தனிக்கட்சிகளின் செல்வாக்கு எத்தகையதாக இருக்கும் என்ற ஒரு சுயபரிசோதனையை மேற்கொள்வதற்கும் வசதியாக இருந்திருக்கும்.
ஆனால், மஹிந்த ராஜபக்ச அரசியலுக்குள் மீண்டும் நுழைந்துள்ள நிலையில், எந்தக் கட்சியில் போட்டியிடுவதெனத் தெரியாமல் அவர் குழம்பிப் போனதைப் போலவே, பெரும்பாலான கட்சிகள் தேர்தல் உத்திகள் தொடர்பாக முடிவெடுக்க முடியாமலும் திணறிப் போயின.
மஹிந்த ராஜபக்சவின் மறுபிரவேசம்- அதாவது, பாராளுமன்றத் தேர்தலில் அவர் போட்டியிடப் போவது உறுதிப்படுத்தப்பட்டு விட்ட நிலையிலும், அவர் எந்த அணியில் போட்டியிடுவார் என்பது இந்தப் பத்தி எழுதப்படும் வரையில் முடிவாகவில்லை.
மீண்டும் பாராளுமன்ற அரசியலுக்குத் திரும்ப முடிவெடுத்தாலும், எந்தக் கட்சியில் போட்டியிடுவதென்று தெரியாமல் குழம்பிப் போயிருந்தார்.
அந்த முடிவை எடுக்கும் அதிகாரத்தைக் கூட மைத்திரிபால சிறிசேனவிடம் விட்டிருந்தது மஹிந்த ராஜபக்சவின் பலவீனமே.
மஹிந்த ராஜபக்ச சிங்கள மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்குப் பெற்ற தலைவராக இன்னமும் விளங்குகிறார் என்பதிலோ, பாராளுமன்றத் தேர்தல் களத்தில் அவரால் பெரிய திருப்பங்களை ஏற்படுத்த முடியும் என்பதிலோ மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
ஐ.தே.க.வோ, ஜே.வி.பி.யோ, ஏனைய கட்சிகளோ கூறுவது போல, மஹிந்த ராஜபக்சவை சிங்கள மக்கள் குப்பைக்கூடைக்குள் போடுவார்கள் என்று எதிர்பார்க்க முடியவில்லை.
மஹிந்த ராஜபக்ச தோல்விக்குப் பின்னரும், ஊடகங்களைப் பயன்படுத்தி தன்னைச் சுற்றி உருவாக்கி வந்திருக்கிற ஒரு விம்பத்துக்கு, அவரது குழப்பநிலை ஊறுவிளைவிப்பதாக இருந்தாலும், மஹிந்த ராஜபக்சவுக்கான அரசியல் செல்வாக்கில் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது.
பாராளுமன்றத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ச எந்த அணியில் இருக்கிறாரோ அந்த அணி கணிசமான ஆசனங்களை வெற்றி கொள்ளும் நிலையில் இருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
இது மைத்திரிபால சிறிசேன, சந்திரிகா குமாரதுங்க, ராஜித சேனாரத்ன என்று எல்லோருக்குமே தெரிந்த விடயம்தான்.
ஆனாலும், அவர்கள், மஹிந்த ராஜபக்சவின் தயவில் தமது கட்சியை மீண்டும் ஆட்சி அதிகாரத்தில் ஏற்றுவதற்கு தயங்குவதற்கு காரணம், மஹிந்த ராஜபக்சவின் வருகைக்குப் பின் நல்லாட்சி என்பது காணாமற்போய் விடும் என்பதுதான்.
அதனால்தான், சுதந்திரக் கட்சி ஆட்சியைப் பிடிக்காமல் போனாலும் சரி, மஹிந்த ராஜபக்சவை வெளியேற்றுவதே முதல் குறி என்று அவர்கள் செயற்பட்டனர்.
அந்த வகையில், மஹிந்த ராஜபக்சவுக்கு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடாகவோ, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடாகவோ, வேட்பாளர் பட்டியலில் இடம் கிட்டப் போவதில்லை என்பது உறுதியாகிவிட்டது.
எவ்வாறாயினும், மஹிந்த ராஜபக்சவின் வருகையானது, ஸ்ரீங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகியவற்றுக்கு எமகண்டமாகவே அமைந்து போனது. மஹிந்த ராஜபக்ச எந்த முடிவை எடுத்தாலும், இந்த இரண்டு கட்சிகளுமே பிளவுபட்டுப் போகும் நிலைதான் உள்ளது.
மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்குப் பின்னர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள், மைத்திரி அணி, மஹிந்த அணி என்று இரு அணிகள் பலம் பெற்றன. சுமார் 100 வரையிலான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மஹிந்த ராஜபக்சவின் பக்கமும், சுமார் 36 வரையிலான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மைத்திரிபால சிறிசேன பக்கமும் இருப்பதாக கருதப்படுகிறது. இவர்களில் மதில் மேல் பூனையாக இருப்பவர்களும் உள்ளனர்.
எந்த அணி பலம் பெறுகிறதோ, எங்கு அதிக வெற்றி வாய்ப்பும் வசதிகளும் கிடைக்கிறதோ அங்கு தாவிச்செல்லப் பலரும் தயாராக இருப்பது வழமை.
மஹிந்த ராஜபக்சவை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளராக நிறுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்தால், அவரது ஆதரவாளர் அணி அங்கேயே தங்கிக் கொள்ளும்.
அதேவேளை, மஹிந்த ராஜபக்சவுக்கு எதிரான அணியினர், குறிப்பாக மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவாளர்களும், அவரை ஜனாதிபதியாக்குவதற்கு முன்னின்றவர்களும், கட்சியை விட்டு வெளியேறும் நிலை உருவாகும்.
இத்தகையதொரு நிலையில், சந்திரிகா தலைமையில் ஒரு அணி போட்டியில் இறங்கும் என்றும் அன்னப்பறவை சின்னத்தில் தனியான கூட்டணி ஒன்று உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது,
ஏற்கனவே அதுகுறித்த பேச்சுக்களும் இடம்பெற்றிருக்கின்றன.
மஹிந்த ராஜபக்சவை அதிகாரத்துக்கு வரவிடாமல் தடுப்பதற்காகவே, இந்த அணி களமிறங்கும்.
இந்த அணி தனியாக களமிறங்கினால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வாக்கு வங்கி உடையும். அது மஹிந்த ராஜபக்சவின் வெற்றியைப் பாதிக்கும்.
அதேவேளை, மஹிந்த ராஜபக்சவுக்கு போட்டியிட இடமளிக்க முடியாது என்ற பிடிவாதத்தில் மைத்திரிபால சிறிசேன உறுதியாக இருந்தால், மஹிந்த ராஜபக்சவும் அவரது அணியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து வெளியேறி தனியான ஒரு தளத்தில் போட்டியிடும். அப்போதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உடையத்தான் போகிறது.
மஹிந்த ராஜபக்சதான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உடைவதற்கு முக்கிய காரணியாக மாறியிருக்கிறார்.
அவர் ஜனாதிபதித் தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட பின்னர், ஏனைய ஜனாதிபதிகளைப் போலவே, ஓய்வுநிலைக்குச் சென்றிருந்தால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இந்த எமகண்டம் உருவாகியிருக்காது.
ஆனால், மஹிந்த ராஜபக்சவின் அதிகார மோகமும், அவரைச் சுற்றியுள்ள அதிகார ருசி கண்ட அரசியல் சக்திகளும் ஓய்வு நிலைக்குச் செல்ல மஹிந்த ராஜபக்சவுக்கு இடமளிக்கவில்லை என்பதே பரவலான குற்றச்சாட்டாகும்.
எவ்வாறாயினும் மஹிந்த ராஜபக்சவின் அரசியல் மீள்பிரவேசம் என்பது, இலங்கைத் தீவின் அரசியல் எதிர்காலத்துக்கு சாதகமான ஒன்றாக அமைந்துவிடக் கூடிய வாய்ப்புகள் இல்லை.
அதுபோலவே அடுத்த பாராளுமன்றம், எந்தக் கட்சியும் பெரும்பான்மை பலம்பெறக் கூடிய ஒன்றாக அமைவதற்கு வாய்ப்புகள் இல்லையேன்றே பெரும்பாலானோரின் கணிப்பாக இருக்கிறது.
வாக்குகள் பிரிந்து, போகக் கூடிய நிலை தோன்றியிருக்கின்ற சூழலில், அறுதிப் பெரும்பான்மை பலம் கொண்ட பாராளுமன்றம் உருவாவது சாத்தியமில்லை.
ஒரு வகையில் இது சிறு மற்றும் சிறுபான்மையினக் கட்சிகளுக்கு சாதகமான பெறுபேற்றைக் கொடுக்கலாம்.
தேசிய அரசு என்ற கொள்கை வலுப் பெறுவதற்கும், சிறு மற்றும் சிறுபான்மையினக் கட்சிகளின் தயவில் ஆட்சி அமைக்கின்ற நிலை ஏற்படுவதற்கும் இன்றைய அரசியல் சூழல் வழியமைக்கலாம்.
இது சிறுபான்மையினங்களுக்கு நன்மையளிப்பதாக இருந்தாலும், சிங்கள இனவாதம் விழிப்படையவும் கூர்மை பெறவும் வழிவகுத்து விடக்கூடிய ஆபத்து இருப்பதையும் மறந்து விடலாகாது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மஹிந்தவின் தாக்குதலினாலே சுசில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்?
» மஹிந்தவின் செயலாளர் ஒருவர் கைது
» மஹிந்தவின் பாதுகாப்பை குறைக்குமாறு சந்திரிக்கா கோரிக்கை
» மஹிந்தவின் செயலாளர் ஒருவர் கைது
» மஹிந்தவின் பாதுகாப்பை குறைக்குமாறு சந்திரிக்கா கோரிக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum