Top posting users this month
No user |
Similar topics
குமரி மண்ணில் கிறிஸ்தவம்
2 posters
Page 1 of 1
குமரி மண்ணில் கிறிஸ்தவம்
குமரி மண்ணில் கிறிஸ்தவம்
விலைரூ.140
ஆசிரியர் : ஜி.ஐசக் அருள்தாஸ்
வெளியீடு: தமிழ் ஆய்வு மையம்
பகுதி: சமயம்
Rating
★ ★ ★ ★ ★
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
பக்கம்: 294
கிறிஸ்துவின் சீடர் ஆன தோமா, இந்திய மண்ணில் கால் பதித்த நாள்முதல் இன்று வரையிலும், குமரிமண்ணில் கிறிஸ்தவம் பரவிய வரலாற்றை, இந்த நூல் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. சமயப்பணி, கல்விப்பணி, மருத்துவப் பணி, சமூகப்பணிகளின் வழியே கிறிஸ்தவம் மக்களிடையே பரப்பிய செய்திகள், வரிசையாகத் தரப்பட்டுள்ளன."உயர் ஜாதியினரின் ஒடுக்குதலால் துன்பம் அனுபவித்த மக்கள், விடுதலை வாழ்வு வேண்டிய கிறிஸ்தவ மிஷினரிகளால், கிறிஸ்தவத்தை ஏற்றுக் கொண்டனர். பக்கம்: 33.
1709 ஜூலை 9ம் நாள் தரங்கம்பாடியில், சீகன்பால்கு வந்து இறங்கினார். 13 ஆண்டு காலம், தமிழகத்தில் கிறிஸ்தவ சமயத்தைப் பரப்பினார். இதற்கான போதகர் கல்லூரியை, 1718ல் தொடங்கினார்.
மேலாடை அணிய உரிமை கோரி,தோள்சீலைக்கலகம், 200 ஆண்டுகளுக்கு முன் நடந்தது. இதனால்,கிராமம், கிராமமாகக் கிறிஸ்தவ சமயத்துக்கு மாறினர். மருத்துவம், கல்வி, கைத்தொழிலின் வழியே குமரிமண்ணில் கிறித்தவம் காலூன்றியதை, இந்த நூல் கைகாட்டிப் பயணிக்கிறது.
abirami- Posts : 4514
மன்றத்தில் இணைத்த தேதி : 26/12/2014
Re: குமரி மண்ணில் கிறிஸ்தவம்
ஓரளவுக்கு இணையத்தில் இந்த புத்தகத்தை தேடிவிட்டேன், ஒரு இடமும் கிடைக்கவில்லை
யாருக்காவது தெரிந்தால் கூறுங்கள், நன்றி
யாருக்காவது தெரிந்தால் கூறுங்கள், நன்றி
SajeevJino- Posts : 1
மன்றத்தில் இணைத்த தேதி : 29/04/2015
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum