Top posting users this month
No user |
Similar topics
புடலங்காய் பலபருப்பு கூட்டு
Page 1 of 1
புடலங்காய் பலபருப்பு கூட்டு
சிறிய புடலங்காய் - 1,
கடலைப்பருப்பு - 1 கைப்பிடி,
பாசிப்பருப்பு - 1 கைப்பிடி,
துவரம்பருப்பு - 1 கைப்பிடி,
ராஜ்மா - 1 கைப்பிடி,
சோயா - 1 கைப்பிடி,
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு.
வறுத்து அரைக்க:-
=============
உளுத்தம்பருப்பு - 1 மேசைக்கரண்டி,
காய்ந்த மிளகாய் - 5,
சீரகம் - 1 தேக்கரண்டி,
மிளகு - 1/2 தேக்கரண்டி,
தேங்காய் துருவல் - 1 மேசைக்கரண்டி,
தாளிக்க:-
========
கடுகு - 1/2 தேக்கரண்டி,
கறிவேப்பிலை - சிறிது,
தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி.
புடலங்காயை சன்னமாக அரை அங்குல நீள துண்டுகளாக நறுக்கவும்.
எல்லா பருப்புடன் புடலங்காய், தண்ணீர், மஞ்சள் தூள் சேர்த்து, குக்கரில் 5 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
வறுக்க கொடுத்துள்ளவற்றை வெறும் வாணலியில் வறுத்து, அரைத்து வைக்கவும்.
குக்கரை திறந்து, அரைத்த விழுது, உப்பு சேர்த்து கொதிக்க விட்டு, தேங்காய் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து கொட்டி, கொத்தமல்லி தூவி இறக்கவும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum