Top posting users this month
No user |
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இரண்டு பிரிவினரை திருப்திப்படுத்த வேண்டியுள்ளது: சரத் அமுனுகம
Page 1 of 1

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதமர் வேட்பாளராக முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்சவை நிறுத்துவது என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இது குறித்து சமல் ராஜபக்சவின் கருத்தை கேட்டுள்ளார். தான் அரசியலில் இருந்து ஓய்வுபெற தீர்மானித்துள்ளதாக சமல் ராஜபக்ச கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டு பிரிவினரை திருப்திப்படுத்த வேண்டிய தேவை இருப்பதால், சமல் ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டது எனவும் சரத் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உண்மையில் இரண்டாக பிளவுப்பட்டு விட்டதா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள அமைச்சர் அமுனுகம, கட்சி பிளவுப்படவில்லை எனவும் பல்வேறு நிலைப்பாடுகளை கொண்டுள்ளவர்கள் இருக்கின்றனர் எனவும் கூறியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் நாடாளுமன்றத்தில் 127 ஆசனங்களை கொண்டிருந்ததுடன் அதில் சிரமங்களும் இருந்தன. இதனால், கீழ் மட்டத்தில் தலைவர்கள் உருவாக தடையேற்பட்டது.
எதிர்காலத்தில் அப்படியான தடைகள் இல்லை. இதனால்,கீழ் மட்டத்தில் இருப்பவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் என்பது குறித்து மகிழ்ச்சியடைகின்றேன்.
கடந்த முறை முன்வரிசையில் இருந்த பலருக்கு இம்முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காமல் போகலாம் எனவும் சரத் அமுனுகம மேலும் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum