Top posting users this month
No user |
முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகளுக்கு தமிழ் அரசியல் கைதிகளின் அன்பான வேண்டுகோள்!
Page 1 of 1

இலங்கையில் நடைபெற இருக்கின்ற பாராளுமன்ற பொதுத் தேர்தல் தொடர்பாக முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகளுக்கு இலங்கையின் பல்வேறு சிறைச்சாலைகளிலே தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் ஒரு அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர்.
அந்த வேண்டுகோளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
அன்பான முன்னாள் போராளிகளே.!
இலங்கையில் நடைபெற இருக்கின்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில் மூத்த ஊடகவியலாளர் வித்தியாதரன் தலைமையில் முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகளாகிய தாங்களும் போட்டியிடப் போவதாக ஊடகங்கள் மூலமாக நாங்கள் அறிகிறோம்.
ஜனநாயக நாடொன்றில் அந்த நாட்டில் நடைபெறுகின்ற தேர்தலில் அந்நாட்டு குடிமகனான எவரும் தேர்தலில் போட்டியிடலாம் அதற்கு தடையில்லை.
ஆனால் இலங்கையின் தற்போதைய அரசியல் சூழலில் தமிழ் மக்களாகிய நாம் மிகவும் புத்திசாதுரியமாகச் சிந்தித்து செயலாற்ற வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
ஏனெனில் சர்வதேசத்தின் பார்வை ஈழத்தமிழ் மக்களின் பக்கம் திரும்பிக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில் தமிழ் மக்களின் ஒற்றுமையும் அரசியல் பலமும் மீண்டும் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தினை முடிவுக்கு கொண்டு வருவதாகக் கூறி முன்னாள் மகிந்த அரசால் தொடங்கப்பட்ட உள்நாட்டுப் போரில் பல லட்சம் தமிழ் மக்களைக் கொன்று குவித்ததற்காகவும் சரணடைந்த போராளிகளுக்கு என்ன நடந்ததென்பதற்காகவும் ஒரு சர்வதேச விசாரணையை எதிர்நோக்கியுள்ள தென்னிலங்கையின் அரசியல் புள்ளிகள் அவற்றில் இருந்து விடுபடுவதற்காக தமிழ் மக்களின் ஒற்றுமையைக் குலைத்து தமிழ் மக்களின் அரசியல் பலமான தமிழ் தேசிய கூட்டமைப்பினை உடைப்பதற்கு பல சதித் திட்டங்களை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் மேற்கொண்டு வருவதனை நாம் அறிவோம்.
இதன் ஒரு கட்டமாகத்தான் நடைபெற இருக்கின்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக பல தமிழ் கட்சிகளை தேர்தலில் போட்டியிட வைத்து தமிழ் மக்களின் அரசியல் பலத்தினை உடைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
எனவே தமிழ் மக்களின் மண்ணுக்காகவும் விடிவிற்காகவும் உயிரையே துச்சமென நினைத்து போராடி பல இன்னல்களையும் அனுபவித்து தொடர்ந்தும் துன்பப்பட்டுக் கொண்டிருக்கின்ற முன்னாள் போராளிகளாகிய தாங்கள் எமது தேசியத் தலைவரால் வழிநடாத்தப்பட்டு தமிழ் மக்களின் பலமான அரசியல் சக்தியாக அவரால் உணரப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பினை இல்லாதொழிக்கும் செயற்பாட்டிற்கு ஒருபோதும் உடந்தையாக இருக்கக்கூடாதென பல ஆண்டுகளாக விசாரணையின்றி சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளாகிய நாங்கள் அன்பாக வேண்டி நிற்கின்றோம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum