Top posting users this month
No user |
Similar topics
கோவைக்காய் சப்ஜி
Page 1 of 1
கோவைக்காய் சப்ஜி
கோவைக்காய் - கால் கிலோ
வெங்காயம் - 3 மீடியம் சைஸ்
தக்காளி - 2 மீடியம் சைஸ்
மிளகாய் வற்றல் - 4
சீரகம் - ஒன்னரை டீஸ்பூன்
பூண்டு - 4 பல்
மஞ்சள் தூள் - 2 பின்ச்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
மல்லி ,கருவேப்பிலை - சிறிது
உப்பு - தேவைக்கு
கோவைக்காயை நீட்டுக்கு கட் செய்து குறுக்கே கட் செய்து கொள்ளவும்.ஒரு காயை நான்காக கட் செய்து கொள்ளவும்.வெங்காயம்,தக்காளி,மல்லி இலை கட் செய்து கொள்ளவும்.
கடாயில் 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு 1 டீஸ்பூன் சீரகம்,பூண்டு,வற்றல்,வெங்காயம்,தக்காளி,உப்பு சிறிது சேர்த்து வதக்கி எடுக்கவும்.
வதக்கியதை ஆறவைத்து மையாக மிக்ஸியில்அரைத்துக் கொள்ளவும்.
அதே கடாயில்எண்ணெய் 1 டேபிள்ஸ்பூன் விட்டு, பாதி ஸ்பூன் சீரகம்,கருவேப்பிலை போட்டு வெடித்தவுடன் கோவைக்காய் போட்டு வதக்கவும்,சிறிது,மஞ்சள் தூள் , உப்பு சேர்க்கவும்.பின்பு அரைத்த கலவையை சேர்த்து நன்கு கிளரவும்,பச்சை வாடை போகட்டும்,மல்லி இலை தூவி இறக்கவும்.
சுவையான கோவைக்காய் சப்ஜி ரெடி.சப்பாத்தி,தோசைக்கு தொட்டு சாப்பிடலாம்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum