Top posting users this month
No user |
கொத்தவரங்காய் வத்தல்
Page 1 of 1
கொத்தவரங்காய் வத்தல்
கொத்தவரங்காய் - ஒரு கிலோ
உப்பு - ஒரு ஆழாக்கு
தயிர் - ஒரு லிட்டர்
கொத்தவரங்காயை இரண்டாக நறுக்கவும். சின்ன காயாக இருந்தால் இரண்டு பக்கமும் காம்பை கிள்ளி விட்டு முழுதாக போட்டு உப்பில் பாதியை போட்டு வேக விட்டு தண்ணீரை வடிக்கவும். (குழையவிடக்கூடாது.)
தயிரில் மீதி உப்பை போட்டு காயை ஒரு நாள் ஊறப்போட்டு மறுநாள் தயிரில்லாமல் அள்ளி காயப்போடவும். வெயில் போனவுடன் எடுத்து மறுபடியும் மீதமிருக்கும் தயிரில் போட்டு மறுநாள் காயப்போடவும்.
இதே போல் தயிர் தீரும்வரை போட்டு எடுத்து காயப்போடவும். நல்ல மொறு மொறுவென்று வரும் வரை காயப்போட்டு மூடி டப்பாவில் போட்டு வைத்தால் தேவையான நேரத்தில் வறுத்து கொள்ளலாம். வத்தக்குழம்பு வைக்கலாம்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum