Top posting users this month
No user |
Similar topics
கனேடியன் சீஸி வெஜிடபிள்
Page 1 of 1
கனேடியன் சீஸி வெஜிடபிள்
காலிஃப்ளவர் - ஒன்று
புரோக்கலி - ஒன்று
மைதா - கால் கோப்பை
துருவிய சீஸ் - அரைக்கோப்பை + ஒரு மேசைக்கரண்டி
வெங்காயம் - ஒரு மேசைக்கரண்டி
வெண்ணெய் - கால்கோப்பை + ஒரு மேசைக்கரண்டி
ரொட்டித்தூள் - ஒரு கோப்பை
பால் - இரண்டு கோப்பை
உப்புத்தூள் - அரைத்தேக்கரண்டி
மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி
கடுகுத்தூள் - கால் தேக்கரண்டி
செலரி சால்ட் - கால் தேக்கரண்டி
முதலில் அவனை 350 டிகிரி F ல் வைத்து வெப்பப்படுத்தவும்.
காய்கறிகளை கழுவி பூக்களை தனித்தனியாக பிய்த்தெடுத்து பேக் செய்யும் பாத்திரத்தில் பரவலாக போடவும்.
ஒரு சிறிய சட்டியை அடுப்பில் வைத்து வெண்ணெயைப் போட்டு உருக்கி வெங்காயத்தைப் போட்டு வதக்கவேண்டும். சிவக்க கூடாது.
பிறகு மைதாவைக் கொட்டி கிளறவேண்டும். தொடர்ந்து பாலை ஊற்றி நன்கு கலக்கவும்.
பிறகு துருவிய சீஸைப் போட்டு கிளறி விட்டு கொதிக்க விட வேண்டும்.
சாஸ் கொதிக்க ஆரம்பித்தவுடன் அடுப்பின் அனலைக் மிகவும் குறைத்து வைக்கவும்.
ஒரு இரண்டு நிமிடங்கள் கழித்து கிளறி விடவும். அடிப்பிடிக்காமல் சாஸ் பச்சை வாசனை நீங்கி கெட்டியாக மாறும் வரை கிளறி விடவும்.
பிறகு எல்லாத்தூளையும் சேர்த்து எடுத்து வைத்துள்ள ஒரு மேசைக்கரண்டி சீஸையும் போட்டு அது உருகியதும் தயாரித்து வைத்துள்ள காய்கறிகளின் மீது பரவலாக ஊற்றவும்.
பின்பு ரொட்டித்தூளை பரவலாகப் போட்டு எடுத்துவைத்துள்ள வெண்ணெயை சிறிது சிறிதாக கிள்ளி அதன் மீது பரவலாக போடவும்.
பிறகு இதை சூடாகிய அவனில் வைத்து இருபது முதல் முப்பது நிமிடங்கள் அல்லது சாஸ் நன்கு கொப்பளித்து ரொட்டித்தூள் நன்கு சிவந்தவுடன் வெளியில் எடுத்து சூடாக பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum