Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


எண்ணெய் கத்திரிக்காய் (கர்நாடகா ஸ்டைல்)

Go down

எண்ணெய் கத்திரிக்காய் (கர்நாடகா ஸ்டைல்) Empty எண்ணெய் கத்திரிக்காய் (கர்நாடகா ஸ்டைல்)

Post by oviya Sun Jun 28, 2015 9:50 am

குட்டி கத்திரிக்காய் - 6
சின்ன வெங்காயம் - 10
புளி - சுண்டைக்காய் அளவு
அரைக்க:
வேர்க்கடலை(நிலக்கடலை) - 1 1/2 மேசைக்கரண்டி
தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி(காரத்திற்கேற்ப)
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
நல்லெண்ணெய் - 4 மேசைக்கரண்டி( குறைவாகவும் எடுத்துக் கொள்ளலாம்)
கடுகு - அரை தேக்கரண்டி
சீரகம் - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து



சின்ன வெங்காயத்தை தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும். மற்ற தேவையானவற்றை அனைத்தையும் எடுத்து தயாராக வைத்துக் கொள்ளவும்.


கத்திரிக்காயை காம்பை மட்டும் நீக்கி விட்டு, படத்தில் உள்ளது போல் நான்காக கீறி உப்பு சேர்த்த தண்ணீரில் 10 நிமிடங்கள் போட்டு வைக்கவும்.


அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களில் அரை மேசைக்கரண்டி வேர்க்கடலை மட்டும் தனியே எடுத்து வைத்து விட்டு மற்ற பொருட்களை மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து மையாக அரைக்கவும். பின்னர் எடுத்து வைத்துள்ள வேர்க்கடலையை சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.


அரைத்து வைத்திருக்கும் மசாலாவை படத்தில் உள்ளது போல் கத்திரிக்காயினுள் நிரப்பவும். மீதமுள்ள மசாலாவை தனியே வைக்கவும்.


வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்த்து 30 விநாடிகள் வதக்கவும்.


அதனுடன் ஸ்டஃப் செய்த கத்திரிக்காய் சேர்த்து இரண்டு மூன்று நிமிடங்கள் நன்றாக வதக்கி தீயைக்குறைத்து மூடி போட்டு 3 நிமிடம் வேக விடவும். இடையிடையே அடிப்பிடிக்காமல் கிளறி விடவும்.


மீதமுள்ள மசாலாவை சேர்த்து, கால் கப் தண்ணீரில் புளியைக்கரைத்து அதில் ஊற்றி கொதிக்க விடவும். கொதி வந்ததும் தீயைக் குறைத்து வேக விடவும்.


தண்ணீர் வற்றி காய் குழைய வேகும் வரை(ஆனால் கத்திரிக்காய் உடைந்து விடக்கூடாது) குறைந்த தீயில் கிளறி இறக்கவும்.


சுவையான எண்ணெய் கத்திரிக்காய் தயார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum