Top posting users this month
No user |
எம்.எல்.ஏ நடிகர் அருண்பாண்டியனை காணவில்லை! கண்டுபிடித்து தந்தால் ரூ.10,000 பரிசு
Page 1 of 1

பிரபல நடிகரும், திரைப்படத் தயாரிப்பாளருமான பேராவூரணி தொகுதி எம்.எல்.ஏ அருண்பாண்டியனை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ.10,000 பரிசு என்று பேஸ்புக்கில் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கும் அருண்பாண்டியன், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்து போட்டியிட்டபோது வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் நெருங்கிய நண்பராக இருந்த அவர், தேர்தல் பிரச்சாரத்தின்போது, நான் வெற்றி பெற்றால் பேராவூரணியில் வீடு எடுத்து தங்கியிருந்து, மக்கள் பணி ஆற்றுவேன் என்று கூறினார்.
பின்னர் வெற்றி பெற்று எம்.எல்.ஏ-வான சிறிது காலத்திலேயே கட்சித் தலைவர் விஜயகாந்தை எதிர்த்துக் கொண்டு அதிமுக ஆதரவு எம்.எல்.ஏ.வாக செயல்படத் தொடங்கினார்.
இந்நிலையில், இவர் பேராவூரணி தொகுதியில் பெரும்பாலும் தலைகாட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக இருந்துவருகிறது.
மக்களின் குறைகளை கேட்கப் பிரதிநிதியும் இல்லை. தொகுதியில் வளர்ச்சிப் பணிகளும் நடக்கவில்லை என பேராவூரணி பகுதி இளைஞர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், பேஸ்புக்கில் பேராவூரணியை சேர்ந்த இளைஞர்கள் காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில், முகநூலில், காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு, தொகுதி எம்.எல்.ஏ அருண்பாண்டியனை காணவில்லை. அவரை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ.10,000 பரிசு என பதிவிட்டுள்ளனர்.
இந்த பதிவு, இப்பகுதி மக்களிடமும், இங்கிருந்து வெளிநாடுகள் சென்று வசிப்பவரிகளிடமும் தீயாகப் பரவி வருகிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum