Top posting users this month
No user |
Similar topics
எளிய தமிழில் ஷ்ரீமத் பகவத் கீதை
Page 1 of 1
எளிய தமிழில் ஷ்ரீமத் பகவத் கீதை
விலைரூ.120
ஆசிரியர் : கிருஷ்ணமாச்சாரி நரசிம்மன்
வெளியீடு: எல்.கே.எம்., பப்ளிகேஷன்
பகுதி: ஆன்மிகம்
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
எல்.கே.எம்., பப்ளிகேஷன், 33/4, ராமநாதன் தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 318).
பொழுது போக்குவதற்கு சில நூல்கள் பயன்படும். மனத்திற்கு மகிழ்ச்சியை உண்டாக்கும் சில நூல்கள்; இறை உணர்வு பெறவும், வாழ்வின் பயனை அறியவும் சில நூல்கள் உதவும். இவை அத்தனையும் சேர்ந்ததே பகவத் கீதை என்ற ஒப்பற்ற நூலாகும். அத்தகு சிறப்புடைய நூலுக்கு எளிய தமிழில் அருமையான விளக்கவுரையைக் கொண்டதாக இந்நூல் திகழ்கிறது.
`நான்கு ஐயங்களும், ஒரு பதிலும்' என்று உரையாசிரியர் எழுதியுள்ள பகுதி அனைவரும் படித்து இன்புற வேண்டிய ஒன்றாகும் (பக்.21-30).
இந்நூலில், 18 அத்தியாயங்களின் ஆரம்பத்திலும், அத்தியாய விளக்கம் மிகவும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. பகவத் கீதை சுலோகங்களுக்கு நல்ல தமிழில் விளக்க உரையைக் கூறியுள்ள ஆசிரியரின் புலமை நம்மை வியக்க வைக்கிறது.
நூலின் இறுதியில் உள்ள ஆதிசங்கரரின் பஜகோவிந்தத்தின் தமிழாக்கமும் நூலுக்குப் பெருமை சேர்க்கிறது (பக்.310-312). மிகவும் பயனுள்ள அருமையான நூல்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum