Top posting users this month
No user |
ஜனவரி 8ம் திகதிக்கு பின் முதல்முறையாக நாடாளுமன்றம் சென்ற பசில் ராஜபக்ச! முஸ்லிம் உறுப்பினர்களுடன் பேச்சு
Page 1 of 1

பல மாதங்களின் பின்னர் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச இன்று நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலின் பின்னர் கடந்த ஜனவரி மாதம் 11ம் திகதி அமெரிக்கா நோக்கி பயணித்தவர் கடந்த ஏப்ரல் மாதம் 21ம் திகதி இலங்கை வந்தடைந்தார்.
பின்னர் திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் அவரிடம் விசாரணை மேற்கொண்ட நிதி மோசடி விசாரணை பிரிவு அவரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தியதனை தொடர்ந்து அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தார்.
அவர் சில நாட்களுக்கு முன்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
எனினும் பின்னர் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர் நேற்றைய தினமே வீட்டை நோக்கி சென்றார்.
அதனை தொடர்ந்து இன்று மீண்டும் பசில் ராஜபக்ச நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.
ஜனவரி 8 ம் திகதிக்கு பின் முதல் முறையாக நாடாளுமன்றம் சென்ற பசில் ராஜபக்ச
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, கடந்த ஜனவரி 8ம் திகதிக்கு பின்னர் முதல்முறையாக இன்று நாடாளுமன்றத்திற்கு சமூகமளித்திருந்தார்.
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச கடந்த ஜனாதிபதித் தேர்தலில், மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்தை தொடர்ந்தும் உடனடியாக நாட்டை வெளியேறினார்.
இதனையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் நாடு திரும்பிய அவர், பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இருந்த போது திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் காவற்துறையின் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
சுமார் ஆறு வாரங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பசில் ராஜபக்ச அண்மையில் பிணையில் விடுக்கப்பட்டார். பிணையில் வெளியாக அவர் தனியார் மருத்துவமனையில் நேற்று வரை சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்றத்தில் முஸ்லிம் உறுப்பினர்களுடன் பேச்சு நடத்திய பசில்
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, அமைச்சர் றிசார்ட் பதியூதீன் உட்பட முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை இன்று நாடாளுமன்றத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெரியவருகிறது.
அத்துடன் நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான பெருமாள் ராஜதுரையுடனும் பசில் ராஜபக்ச பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான பசில் ராஜபக்ச இன்று மதியம் 1.55 அளிவில் நாடாளுமன்றத்திற்கு சென்றார்.
அவரை நாடாளுமன்ற உறுப்பினர்களான ரட்ணசிறி விக்ரமநாயக்க, தினேஷ் குணவர்தன ஆகியோர் வரவேற்றதுடன் அவர் சபைக்குள் பிரவேசிக்கும் போது எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேசையை தட்டி ஆரவாரம் செய்தனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum