Top posting users this month
No user |
மோசமான வானிலையில் கடலில் மூழ்கிய கப்பல்: போராடி மீட்ட கடற்படையினர்
Page 1 of 1

மும்பை அருகே மிக மோசமான வானிலையில் கடலில் மூழ்கிய கப்பலில் இருந்த 14 பேரை கடற்படையினர் மிகுந்த சவாலுக்கிடையே மீட்டுள்ளனர்.
மும்பை துறைமுகத்தில் இருந்து 75 கடல் மைல் தொலைவில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிச்செல்லும் எம்.வி. கோஸ்டல் பிரைட் இன்று காலை சென்று கொண்டிருந்தது.
14 பணியாளர்களுடன் சென்றுகொண்டிருந்த அக்கப்பலில் திடீரென கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அந்த கப்பல் கடலில் மூழ்க ஆரம்பித்தது.
எனவே கப்பலில் இருந்த பணியாளர்கள், கடற்படையினருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனடியாக கப்பல் மூழ்கிக்கொண்டிருந்த பகுதிக்கு கடற்படையை சேர்ந்த 'சீ கிங்' மற்றும் 'சேடக்' ஹெலிகாப்டர்கள் விரைந்தன.
பின்னர் கடற்படையினர் கப்பலில் இருந்து முதலில் 6 பேரை மீட்டபோது, கப்பல் முழுவதுமாக தண்ணீரில் மூழ்கியது.
இதனால் அதில் இருந்த 8 பேரும் உயிர் தப்புவதற்காக கடலில் குதித்தனர்.
இதையடுத்து விரைந்து செயல்பட்ட கடற்படையினர் கடலில் தத்தளித்த 6 பேரையும் மீட்டுள்ளனர்.
எஞ்சியிருந்த இருவரை கடலோர ரோந்து படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum