Top posting users this month
No user |
கிளிநொச்சி ஆனந்தபுரம் மேற்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்!
Page 1 of 1

கிளிநொச்சி நகரப்புறத்தின் முக்கிய கிராமங்களில் ஒன்றான ஆனந்தபுரம் ஏ9 வீதியோடு நெருக்கமாக உள்ளது.
இந்த கிராமத்தில்தான் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம், தேசிய பாடசாலை கிளிநொச்சி மத்திய ஆரம்ப பாடசாலை, கிளிநொச்சி பொதுவைத்தியசாலை, கல்வி திணைக்களம், தொழில்பயிற்சி அதிகார சபை, தொழில் நுட்ப கல்லூரி, மின்சாரசபை மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் பல்வேறு அமைப்புக்கள் இயங்கி வருகின்றன.
இக்கிராமம் ஆனந்தபுரம் கிழக்கு மேற்கு என இரண்டு கிராம அபிவிருத்திச்சங்கங்களின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வருகின்றது. இதில் ஆனந்தபுரம் மேற்கு கிராமத்தின் பல்வேறு குறைபாடுகளை மக்கள் கடந்த 21ம் திகதி அங்கு கலந்துரையாடலுக்கு வருகைதந்த யாழ் மாவட்ட பா.உறுப்பினர் சி.சிறீதரனிடம் தெரியப்படுத்தியுள்ளனர்.
கிராம அபிவிருத்தி சங்கத்தினர் மகஜர் ஒன்றை அங்கு கையளித்துள்ளனர் அந்த மகஜரில் உள்ள விடயங்கள் வருமாறு
கிராமத்தின் வீதிகள் புனரமைக்கப்பட வேண்டியுள்ளது
கிராமத்தின் வடியாலமைப்பை சீர் செய்தல்
வீட்டுத்திட்டத்துக்காக தெரிவு செய்யப்பட்ட 138 பயனாளிகளில் இதுவரை 80 பயளாளிகளுக்கு மட்டுமே வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டுள்ளது. ஏனையவர்களுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுத்தல்.
காணிகளுக்கான உறுதிப்பத்திரங்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல்.
கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலய காணியில் குடியிருப்பவர்களுக்கு மாற்றுக்காணி வழங்கி பாடசாலைக்காணியை விடுவித்தல்.
கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயம், கிளிநொச்சி மத்திய ஆரம்ப பாடசாலை சூழலில் சமூகச்சீரழிவுகள் இடையூறுகள் விளைவிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடிவடிக்கை எடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல்
ஆனந்தபுரம் மேற்கு கிராம அபிவிருத்தி சங்கத்துக்கு ஒரு காணி இல்லாத நிலையில் அதற்கு ஒரு காணியை பெற்றுக்கொடுத்து பொது நோக்கு மண்டபம் அமைத்து கிராம விடயங்ளை மேற்கொள்ள ஏற்பாடு செய்தல்
பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதாரங்களை பெற்றுக்கொடுத்தல்
புகையிரத கடவைகளை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல்
ஆனந்தபுரம் மேற்கு கிழக்கு ஆகிய பகுதிகளுக்கு சனசமுக நிலையங்களை அமைக்க இடம்பெற்றுத்தருதல்
விளையாட்டுத்திடல் ஒன்றை அமைக்க ஏற்பாடு செய்தல்
கழிவகற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ள கரைச்சி பிரதேச சபையை வலியுறுத்தல்
அறநெறி பாடசாலைக்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தல்
முன்பள்ளி கட்டிட நிர்மாண வேலைகளை பூர்த்தி செய்ய நிதியுதவி போன்ற பல்வேறு விடயங்கள் ஆனந்தபுரம் கிராம மக்களால் முன்வைக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி நகரின் மத்தியில் உள்ள கிராமம் பல்வேறு குறைபாடுகளுடன் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
இக்கிராமத்தின் பொதுத்தேவைகளுக்கு காணிகள் இல்லாத நிலையிருக்க பச்சைப்பூங்கா போன்ற வேறுவேறு தேவைகளுக்கு காணிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இக்கிராமத்தில் அமைந்துள்ள சந்திரன்பூங்கா தமிழர்கள் தோற்கடிக்கப்பட்ட போர்ச்சின்னமாக இராணுவத்ததால் ஆக்கிரமிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இக்கிராமத்தில் சந்திரன் பூங்காவிற்கு முன் இயங்கி வந்த மாற்றுவலுவுள்ளோர்களின் அலுவலக காணி இதுவரை மாற்றுவலுவுள்ளோர்களிடம் கையளிக்கப்படாமல் உள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
மேற்படி விடயங்கள் தொடர்பாக முன்னுரிமை அடிப்படையில் ஒழுங்படுத்தப்பட்ட பிரச்சனைகள் தேவைகளுக்கு தீர்வு காணப்படும் என பா.உறுப்பினர் சி.சிறீதரன் பதிலளிக்கும்போது தெரிவித்தார்.
ஆனந்தபுரம் கிராமத்தின் முன்னாள் கிராம அவிவிருத்தி சங்க தலைவரும் ஓய்வு நிலை பிரதி கல்விப்பணிப்பாளருமான சின்னராசா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பா.உறுப்பினர் சி.சிறீதரன், கரைச்சி பிரதேசசபையின் உபதவிசாளர் நகுலேஸ்வரன், கரைச்சி பிரதேசசபை உறுப்பினர் குமாரசிங்கம், திருவையாறு மகா வித்தியலாய அதிபரும் ஆனந்தபுரம் கிராமத்தின் பிரதிநிதியுமான ப.சிறீதரன், ஆனந்தபுரம் கிராம சேவகர் ஜெனிற்றா, ஆனந்தபுரம் அபிவிருத்தி உத்தியோகத்தர், ஆனந்தபும் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் ரஜனிகாந், செயலாளர் ஜெகநாதன் ஆனந்தபுரம் கிழக்கு பிரதிநிதி சிவமோகன் மாதர்சங்க பிரதிநிதிகள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் வேழமாலிகிதன், பா.உறுப்பினரின் செயலாளரும் கிளிநொச்சி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் துணைத்தலைவருமான பொன்.காந்தன், கட்சியின் மத்திய குழு உறுப்பினர் ஜெயக்குமார், கிளிநொச்சி தமிழ் தேசிய கூட்டமைப்பு இளைஞர் அணி தலைவர் சுரேன் உட்பட ஆனந்தபுரம் கிராமத்தின் நலன் விரும்பிகள் கலந்து கொண்டிருந்தனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum