Top posting users this month
No user |
Similar topics
வடமாகாண பனை அபிவிருத்தி வாரம் பிரகடனம்! மாகாண விவசாய அமைச்சர் அறிவிப்பு
Page 1 of 1

பனை வள அபிவிருத்தியை மேம்படுத்தும் நோக்கோடு வடமாகாண பனை அபிவிருத்தி வாரமாக யூலை 22ஆம் திகதி தொடக்கம் 28ஆம் திகதி வரையான காலப்பகுதி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
வடமாகாண சபையின் விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, கூட்டுறவு அபிவிருத்தி, உணவு வழங்கல், நீர் வழங்கல், நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் விடுத்திருக்கும் ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், தமிழ்மக்களின் இயற்கைச் சூழலிலும், பண்பாட்டுச் சூழலிலும், பொருளாதார மேம்பாட்டிலும் பிரதான இடத்தைப் பெற்றிருந்த பனை வளம் தற்போது அதிகம் கவனிக்கப்படாத ஒரு இயற்கை வளமாக உள்ளது. எமது பனைவளம் போர்க் காலத்தில் பெரும் அழிவைச் சந்தித்துள்ளது.
பதுங்கு குழிகளை அமைப்பதற்கும், காப்பரண்களை அமைப்பதற்கும் இலட்சக்கணக்கான பனை மரங்கள் தறித்து வீழ்த்தப்பட்டதோடு, பல்குழல் எறிகணை வீச்சுகளாலும் பல்லாயிரக்கணக்கான பனைமரங்கள் சேதம் செய்யப்பட்டுள்ளன.
போருக்குப் பின்னரும் பனை மரங்கள் அனுமதியின்றிப் பெருமளவுக்கு அழிக்கப்படுகின்றன. இது இயற்கைச் சூழலின் சமநிலையை, குறிப்பாக காட்டு வளம் இல்லாத யாழ் குடாநாட்டின் சூழலைப் பெரிதும் பாதிப்பதாக உள்ளது.
தமிழ் மக்களின் பண்பாட்டைப் ‘பனைப் பண்பாடு’ என்று சொல்லும் அளவுக்கு உணவு முதல் உறையுள் வரை எமது வாழ்வியலில் பிரதான இடம் பிடித்து வந்த பனைவளம் தற்போது எமக்கு அந்நியமான ஒரு வளமாக மாறியுள்ளது.
பனைப் பொருட்களின் பயன்பாடு அருகி வருவதன் காரணமாக, இப்பனை வளத்தைத் தொழில் மூலாதாரமாகப் பயன்படுத்தி வந்த மக்கள் திரளின் பொருளாதாரம் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது.
இவற்றைக் கருத்திற் கொண்டு பனை வளத்தைப் பெருக்கவும், நவீன காலத்துக்கு ஏற்ப பனைப் பயன்பாட்டை நுகர்வோரை ஈர்க்கும் வகையில் அபிவிருத்தி செய்யவும், இதன்மூலம் பனைப் பொருளாதாரத்தை விருத்தி செய்யவும்,
அறிஞர்களினதும் பொதுமக்களினதும் கவனத்தை ஈர்க்கும் விதமாக ஆண்டுதோறும் தாலகாவலர் அமரர் கலாநிதி கந்தையா கனகராசா அவர்களின் நினைவு தினமான யூலை 22ஆம் திகதியில் இருந்து ஒரு வார காலப்பகுதியை வடமாகாண பனை அபிவிருத்தி வாரமாகக் கடைப்பிடிப்பதற்கு வடக்கு மாகாண சபையின் அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
அமரர் கலாநிதி கந்தையா கனகராசா அவர்கள், பனை அபிவிருத்திச் சபை தோற்றம் பெறுவதற்கு முன்பாகவே, தனி ஒருவராக வடக்கு, கிழக்கு பூராகவும் பனை விதைகளை விநியோகித்து பனந்தோப்புக்கள் உருவாக காரணமாக அமைந்தவர்.
இவர், பனம் தொழில் முனைவோரிடம் இருந்து பனைசார் உற்பத்திகளைக் கொள்வனவு செய்து பிறருக்கு அன்பளிப்பாக வழங்கியதன் மூலம் பனம் தொழில் முனைவோரின் வாழ்வாதாரத்துக்கு ஆதாரமாக இருந்ததோடு, பனை உற்பத்திகளின் அறிமுகத்துக்கும் காரணமாக அமைந்தவர் ஆவார். இவர் பனை அபிருத்திச் சபையின் இயக்குநர்களில் ஒருவராகவும் இருந்து பனை அபிவிருத்தியில் பெரும் பங்காற்றியவர்.
இவர் ஆற்றிய பணிகளுக்காக அமரத்துவத்தின் பின்னர் இவருக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் கலாநிதிப் பட்டம் வழங்கிக் கௌரவித்துள்ளது. தாலகாவலரான அன்னாருக்கு உயரிய கௌரவம் வழங்கும் பொருட்டே வடமாகாண பனை அபிவிருத்தி வாரத்துக்குரிய காலப்பகுதியாக, அவரது நினைவு தினமான யூலை 22ஆம் திகதி தொடக்கம் 28ஆம் திகதி வரையான காலப்பகுதி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இக்காலப்பகுதியில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை வடமாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, கூட்டுறவு அபிவிருத்தி, உணவு வழங்கல், நீர் வழங்கல், நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சு பனை அபிவிருத்திச் சபையுடனும், பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களுடனும் வேறு பொருத்தமான அமைப்புகளுடனும் இணைந்து மேற்கொள்ளும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கிழக்கு மாகாண எழுச்சி கண்காட்சியின் இறுதி நாள் நிகழ்வில் வடமாகாண விவசாய அமைச்சர் பங்கேற்பு
» கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் மக்கள் சந்திப்பில்!
» கிழக்கு மாகாண விவசாய அமைச்சராக பிள்ளையான்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum