Top posting users this month
No user |
மைத்திரி – மகிந்தவை பிளவுப்படுத்தும் அமைச்சர்கள்!– டி.பி.ஏக்கநாயக்க
Page 1 of 1

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆகியோரை ஒரே மேடைக்கு கொண்டு வரும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத்திட்டத்தை குழப்பம அமைச்சர்கள் சிலர் முயற்சித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் டி.பி. ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
அமைச்சர் அர்ஜூன ரணதுங்க நேற்று வெளியிட்ட கருத்து பதிலளிக்கும் போது அவர் இதனை கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஒரே மேசையில் ஒரே மேடையில் இருக்க முடியுமா என தான் கேள்வி எழுப்புவதாக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க கொழும்பில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் கூறியிருந்தார்.
இருவருக்கும் இடையில் தெளிவான வேறுபாடுகள் இருப்பதால், அவர்களை ஒரே மேசைக்கு கொண்டு வருவது என்பது பயனற்ற செயல் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
எவ்வாறாயினும் முன்னாள் ஜனாதிபதியையும் இந்நாள் ஜனாதிபதியையும் ஒரே மேடைக்கு கொண்டு வருவது தொடர்பான விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டி.பி. ஏக்கநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியையும் தற்போதைய ஜனாதிபதியையும் இணைக்கும் வேலைத்திட்டத்திற்கு எதிராக கருத்து வெளியிடுவது ஐக்கிய தேசியக் கட்சியின் ஒப்பந்தத்தை நிறைவேற்றும் நடவடிக்கையாகும் எனவும் ஏக்கநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum