Top posting users this month
No user |
Similar topics
பிரதமருக்கும் சிறு கட்சிகளுக்கும் இடையில் சந்திப்பு
Page 1 of 1

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், சிறு கட்சிகளுக்கும் இடையில் இன்று சந்திப்பு நடத்தப்பட உள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட சிறுபான்மை கட்சிகள் மற்றும் சிறு கட்சிகளுக்கு இடையில் சந்திப்பு நடத்தப்பட உள்ளது.
20ம் திருத்தச் சட்ட அமுலாக்கம் தொடர்பில் இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட உள்ளது.
அனைத்து சமூகங்களுக்கும் நியாயமான சந்தர்ப்பம் கிடைக்கக் கூடிய வகையில் தேர்தல் முறைமை மாற்றம் செய்யப்பட வேண்டுமென சிறு மற்றும் சிறுபான்மை கட்சிகள் நேற்று மாதுலுவாவே சோபித தேரரை சந்தித்த போது வலியுறுத்தியிருந்தன.
இந்தப் பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சிறு கட்சிகள் சந்திக்க உள்ளன.
பிரதமரை சந்திக்கும் சிறிய கட்சிகள்
அரசியலமைப்புச் சட்டத்தின் 20வது திருத்தச் சட்டம் சம்பந்தமாக விசேட பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தும் நோக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உட்பட சிறிய கட்சிகள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை இன்று சந்திக்க உள்ளன.
சிறிய கட்சிகள் நேற்று மாதுலுவாவே சோபித தேரரிடம் நடத்திய பேச்சுவார்த்தையின் போது பேசப்பட்ட விடயங்கள் குறித்து பிரதமருடனான பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட உள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
20வது திருத்தச் சட்டம் சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகளின் ஜனநாயக உரிமைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் சிறிய கட்சிகள் அடியோடு ஒழிந்து போகும் எனவும் சிறிய கட்சிகளின் தலைவர்கள் கூறியுள்ளனர்.
அத்துடன் இலங்கையின் சிறுபான்மை சமூகம் தமது நாடாளுமன்ற பிரதிநிதிகளை இழக்கும் நிலைமை ஏற்படும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்
» தேர்தல் முறைமை மாற்றம் குறித்து கட்சித் தலைவர்களுக்கும் பிரதமருக்கும் இடையில் பேச்சுவார்த்தை
» பாப்பாண்டவருக்கும் முன்னாள் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum