Top posting users this month
No user |
நாட்டின் பல பாகங்களிலும் இடம்பெற்ற சர்வதேச யோகா தின நிகழ்வுகள்! பெருமளவு மாணவர்கள் பங்கேற்பு
Page 1 of 1

இந்திய துணை தூதரகத்தின் ஒழுங்கமைப்பில் சர்வதேச யோகா தினம் இன்றைய தினம் யாழ். குடாநாட்டில் கொண்டாடப்பட்டது.
யாழ்.மத்திய கல்லூரி மைதானத்தில் யோகா நிகழ்வுகள் நடைபெற்றன. இதில் பெருமளவு பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் மற்றும் வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் மற்றும் பிரதியமைச்சர் விஜயகலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் தலைமையில் கொழும்பில் சர்வதேச யோகா தின நிகழ்வுகள்
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரதான நிகழ்வுகள் இன்று கொழும்பு காலிமுகத்திடலில் இடம்பெற்றன.
இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வுகளுக்கு இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா தலைமை தாங்கினார்.இதனை தவிர உள்ளூர் அரசியல்வாதிகளும் பள்ளி மாணவர்களும் பங்கேற்றனர்.
யோகா நிகழ்வுகளில் பல்வேறு மனவளக்கலைமன்றம் உட்பட்ட பல அமைப்புக்களும் பங்கேற்றன.
காலை 6 மணியில் இருந்து காலை 8.30வரை இடம்பெற்ற நிகழ்வின் இடையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் யோகா முக்கியத்துவம் குறித்த உரை இடம்பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கிழக்கில் விழிப்புணர்வு நடைபவனி
உலக யோகா தினம் இன்று சர்வதேச ரீதியில் அனுஸ்டிக்கப்படுகின்ற நிலையில்,அதனை முன்னிட்டு கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு நடைபவனி இன்று காலை 7.15 மணிக்கு நடைபெற்றது.
உவர்மலை இளைஞர் விளையாட்டு மைதானத்தில் இருந்து ஆரம்பித்த இந்த நடை பவனியானது உற்துறைமுக வீதியூடாகச் சென்று பின் கடல்முக வீதியூடாக மின்சார நிலைய வீதியை அடைந்து பின் தபால் கந்தோர் வீதியூடாக பயணித்து பின் திருகோணமலை பத்திரகாளி அம்பாள் கோயிலை சென்றடைந்தது.
இவ் வீதி நடைபவனியில் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டதுடன், யோகா பற்றிய முக்கியத்துவத்தை மக்களுக்கு தெளிவுப்படுத்தும் வகையிலான துண்டுப்பிரசுரங்களும் வழங்கிவைக்கப்பட்டது.
மேலும் காலை 9.30 மணிக்கு பத்திரகாளி அம்பாள் கோயில் சோமஸ்கந்தர் மண்டபத்தில் யோகா பற்றிய விழிப்புணர்வு கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum