Top posting users this month
No user |
மைத்திரி ஆட்சியிலும் தொடரும் கைதுகள் - பா.அரியநேத்திரன் பா. உ குற்றச்சாட்டு
Page 1 of 1

தமது குடும்ப கஸ்ட நிலை காரணமாக வெளிநாடு சென்று நாடு திரும்பிய கந்தப்போடி தவராசா நேற்று சவுதியில் இருந்து கட்டுநாயக்க ஊடாக நாடு திரும்பியபோது கைது செய்யப்பட்டுள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
கரடியனாற்றை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 36 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
1999ம் ஆண்டிற்கு முன்னர் விடுதலைப்புலிகளின் அமைப்பில் இருந்து விலகி தமக்கான ஒரு குடும்பத்தினை அமைத்து பல தடவைகள் கட்டார், ஈரான் போன்ற நாடுகளுக்குச்சென்று வந்த தனது கணவன் இரண்டு வருடங்களுக்கு முன்னர் சவூதி சென்றிருந்து நேற்று நாடு திரும்பியபோது கைது செய்யப்பட்டுள்ளார் எனவும், தமக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளதாகவும் அவருடைய மனைவி திருமதி தவராசா தன்னிடம் முறையிட்டுள்ளதாக கூறினார்.
இந்த நாட்டிலே மைத்திரிபால அரசாங்கமானது நல்லாட்சிக்குரிய அரசாங்கமானது என வெளியில் காட்டினாலும் உள்வேலைப்பாடுகள் அனைத்தும் மகிந்த ஆட்சியில் இருந்தது போன்றே இன்றும் நடந்து கொண்டு வருகின்றது.
விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து புணர்வாழ்வு பெற்றோ அல்லது பல வருடங்களுக்கு முன்னர் அந்த அமைப்பில் இருந்து விலகியவர்களை இன்று கட்டுநாயக்காவில் வைத்து கைது செய்வதென்பது மிகவும் வேண்டத்தகாத ஒரு செயற்பாடாகவே பார்க்கவேண்டி இருக்கின்றது.
தாங்கள் இவர்களது கைது தொடர்பாக பாராளுமன்றத்திலும் ஏன் இந்த நாட்டின் சட்டம், ஒழுங்கிற்கு பொறுப்பான அமைச்சராக இருக்கக்கூடிய அமைச்சர் ஜோன் அமரதுங்கவிடமும் பலமுறை இவ்வாறான கைதுகள் தொடர்பாக கூறியிருக்கின்றோம். ஆனால் எதுவும் நடந்தபாடில்லை.
இது இவ்வாறு இருக்க அண்மையில் புலம்பெயர் தேசம் சென்ற வெளிவிகார அமைச்சர் மங்கள சமரவீர புலம்பெயர் மக்களுக்காக வேண்டி பெரிய விழாவை செய்யவேண்டும் என கூறியிருக்கின்றார் என்பதனை பார்க்கும் போது மைத்திரி அரசாங்கத்தில் உள்நாட்டில் நடப்பது ஒன்று, வெளிநாட்டில் நடப்பதொன்று போல் உள்ளதனை தற்போதைய நிகழ்வுகள் புடம்போட்டுக்காட்டுகின்றன.
இந்த நாட்டின் தற்போதைய ஜனாதிபதி தமிழ் மக்களுக்கு ஏதாவது நல்லதை செய்வார் என்று ஏங்கியிருக்கும் தமிழ் மக்கள் மத்தியில் இவ்வாறான கைதுகளை தொடர்ந்து செய்து கொண்டு வருவது மக்கள் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தினை ஏற்படுத்தியிருக்கின்றது எனவும் அவர் கூறினார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum