Top posting users this month
No user |
மலையகத்தில் கடும் மழை: பல இடங்களில் மண்சரிவு அபாயம்
Page 1 of 1

கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக மலையகத்தின் பல பகுதிகளிலும் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் கடும் மழை காரணமாக ஹற்றன் நகருக்கு அண்மையில் அமைந்துள்ள குடியிருப்புகளுக்கு செல்லும் பல வீதிகளில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதுடன், போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்படைந்துள்ளன.
மழை பெய்து வருவதனால் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு ஹற்றன் டிக்கோயா நகர சபையும், ஹற்றன் பொலிசாரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கடும் மழை மக்களை: அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை
மலையகப்பகுதியில் தொடர்ந்தும் பெய்யும் கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு,போக்குவரத்துக்கு பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.
ஹற்றன் கொழும்பு பிரதான வீதியிலும்,ஹற்றன் நுவரெலியா பிரதான வீதியிலும் மண்சரிவு ஏற்படக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது.
மழை காரணமாக வீதி வழுக்கும் தன்மையுடன் காணப்படுவதனால், பிரதான வீதிகளில் பனிமூட்டம் காணப்படும் பட்சத்தில் வாகன சாரதிகள் வாகனங்களின் முன்விளக்கை ஒளிரவிட்டு செலுத்துமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
அத்தோடு மேல்கொத்மலை நீா்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரித்து காணப்படுவதாகவும் கன மழை தொடரும் போது வான்கதவுகளை திறந்து விடுவதற்கு நடவடிக்கைகள் எடுக்க இருப்பதாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அவ்வாறு வான்கதவுகள் திறந்து விடும் பட்சத்தில் அதனை அண்மித்த பகுதியில் வாழும் மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
அத்தோடு பலத்த காற்று வீசுவதனால் மரங்கள் முறிந்து விழும் அபாயமும் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை ஹற்றன் கொழும்பு பிரதான வீதியிலும் ஹற்றன் நுவரெலியா பிரதான வீதியிலும் இன்று காலை அதிக பனிமூட்டம் காணப்பட்டமை குறிப்பிடதக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum