Top posting users this month
No user |
மேல் கொத்மலை நீர்தேக்கம் அமைத்து 7 வருடங்கள் கடந்தும் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை: மக்கள் விசனம்
Page 1 of 1

மேல் கொத்மலை நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டு 7 வருடங்கள் நிறைவு பெற்ற போதிலும் இம்மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இன்னும் வழங்கப்படவில்லையென மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை 10 மணி முதல் 12 வரை தலவாக்கலை மேல் கொத்மலை நீர் மின் திட்ட காரியாலயத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் மக்கள் ஈடுப்பட்டனர்.
தாங்கள் வாழ்ந்த வீடுகளில் சகல வசதிகளும் இருந்ததுடன், வீட்டிற்கு முன்பதாக போதியளவு இடம் இருந்ததாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
மக்களிடம் சகல வசதிகளுடன் வீடு அமைத்து தருவதாகவும் தண்ணீர் வசதி, வீட்டிற்கு முன்பதாக போதிய இடவசதி பெற்று தருவதாக கூறி இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
ஆனால் திட்டம் முடிவடைந்தும் இம்மக்களுக்கு அமைத்து கொடுக்கப்பட்டுள்ள வீடு போதிய வசதி இன்மையாலும் இவ்வீடுகளில் இரண்டு அல்லது மூன்று குடும்பங்கள் வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இம்மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இம்மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்த போதிலும் மக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளப்படவில்லை எனவும் தெரிவித்து இம்மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதேவேளை சம்பந்தப்பட்ட காரியாலயத்தின் அபிவிருத்தி திட்ட அதிகாரியிடம் ஆர்ப்பாட்டகாரர்கள் சந்தித்து தங்களுடைய பிரச்சினைகளை முன்வைத்த போதிலும் குறித்த அதிகாரி இம்மக்களுடைய கருத்துகளை ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளார்.
இருப்பினும் ஆர்ப்பாட்டக்காரர்கள் பல மணி நேரம் முயற்சித்து காத்திருந்து மீண்டும் குறித்த அபிவிருத்தி திட்ட அதிகாரியிடம் தங்களுடைய கோரிக்கைகளை மகஜர் மூலம் கையளித்தனர்.
அதன்பின் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கலைந்து சென்றதோடு தங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றபடாத சந்தர்ப்பத்தில் மீண்டும் பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கப்போவதாக தெரிவித்தனர்.
இது தொடர்பாக சில ஊடகவியலாளர்கள் விபரங்களை குறித்த அதிகாரிகளிடம் சேகரிக்க முயற்சித்த போதிலும் சம்பந்தப்பட்ட அதிகாரி ஊடகங்களுக்கு எவ்வித தகவல்களும் வழங்க முடியாது என கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum