Top posting users this month
No user |
Similar topics
மரம் முறிந்து விழுந்ததில் பெண் தொழிலாளி படுகாயம்- வாகன விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் பலி
Page 1 of 1

மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் காற்றுடன் கூடிய கடும் மழையினால் தோட்ட தொழிலாளிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் இன்று காலை பெய்த காற்றுடன் கூடிய கடும் மழையினால் ஹற்றன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா பட்டல்கலை தோட்டத்தில் காலை 7.30 மணியளவில் கொழுந்து பறிக்க சென்ற பெண் ஒருவரின் மீது மரத்தின் கிளை ஒன்று முறிந்து விழுந்ததில் அவர் படுங்காயங்களுடன் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர் வள்ளியம்மா என்ற 49 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது.
வாகன விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் பலி
நிந்தவூர் அட்டப்பள்ளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பொலிஸ் கான்ஸ்டபிள் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.
அம்பாறை, ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான ஏ.எம்.சரீப்டீன் என்ற 52 வயதுடைய பொலிஸ் அதிகாரியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய இவர், கடந்த செவ்வாய்க்கிழமை தனது கடமைகளை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, நிந்தவூர் அட்டப்பள்ளம் பகுதியில் வைத்து துவிச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.
இவ்விபத்தில் படுகாயமடைந்த இவர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
எனினும் இவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» குருணாகலில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி! 17 பேர் படுகாயம்
» அம்பாறையில் தீ வைத்துக் கொண்ட நபர் பலி - வாகன விபத்தில் பொலிஸ் அதிகாரி பலி
» சம்மாந்துறையில் தூக்கில் தொங்கி இளம் பெண் பலி- வென்னப்புவ வாகன விபத்தில் ஒருவர் பலி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum