Top posting users this month
No user |
Similar topics
பொதுத்தேர்தல் நெருங்க புலிகளைத் தூக்குகிறார் மகிந்த
Page 1 of 1

புதிய அரசின் வேலைத்திட்டத்தால் விடுதலைப் புலிகள் மீண்டும் எழுச்சி பெறுவர் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.
புலம்பெயர் தமிழர்கள் புலிகள் அல்ல என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அண்மையில் கூறியிருந்ததுடன், புலம்பெயர் தமிழ் மக்களுடனான சந்திப்புக்களை, கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கான திட்டங்களும் புதிய அரசினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில்-தமிழ் மண்ணில் வாழ முடியாமல் இந்த நாட்டில் இருந்து வெளியேறியவர்கள்.
தமிழ் இளைஞர்கள் என்றால் அவர்களைச் சுடு, கடத்து, கைது செய் என்ற கட்டளைகளை இந்த நாட்டின் முன்னைய ஆட்சியாளர்கள் காலத்துக்குக் காலம் படைத்தரப்புக்கு பிறப்பித்திருந்தனர்.
இதன் காரணமாக தாங்கள் எவ்வளவு கஷ்டபபட்டாலும் தங்கள் பிள்ளைகளை பாதுகாக்க வேண்டும் என்ற ஒரே நோக்குடன் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.
எனது தாயை, தந்தையை, உறவுகளை விட்டு வெளிநாட்டுக்குப் போக மாட்டேன் என்று அழுத எத்தனையோ இளைஞர்கள் தங்கள் பெற்றோர்களின் வலுக்கட்டாயத்தால் புலம்பெயர்ந்தனர்.
பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பினால் மட்டுமே அந்தப் பிள்ளைகளின் உயிருக்கு உத்தரவாதம் என்ற அடிப்படையில் புலம்பெயர்வு நடக்கலாயிற்று.
எனினும் இலங்கையில் தமிழர்களை வஞ்சித்து அரசும் படைத்தரப்பும் நடத்திய கொடூரங்களுக்கு எதிராக புலம்பெயர் தமிழர்கள் தாம் வாழுகின்ற நாடுகளில் பேரணிகள் நடத்தி கண்டனம் தெரிவித்தனர்.
இந்தக் கண்டனம் இனம் சார்ந்த, மனிதநேயம் சார்ந்த விடயம். இந்த உண்மையை ஜனாதிபதி மைத்திரிபால தலைமையிலான அரசு உணர்ந்து கொண்டுள்ளது.
எனவே, உண்மைகள் உணரப்பட்ட நிலையில், புலம்பெயர் தமிழர்கள் விடுதலைப் புலிகள் அல்ல என்ற உண்மையை சிங்கள அமைச்சர் ஒருவர் பகிரங்கப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் இவற்றை பொறுத்துக் கொள்ள முடியாத முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, புதிய அரசின் வேலைத்திட்டத்தில் விடுதலைப் புலிகள் மீண்டும் எழுச்சி பெறுவர் எனக் கோசம் எழுப்பத் தலைப்பட்டுள்ளார்.
நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் விடுதலைப் புலிகள் பற்றிய மகிந்தவின் பயமுறுத்தல்கள், பிரசாரங்கள் தென்பகுதியில் எடுபடாமல் போக, இப்போது பொதுத் தேர்தலை இலக்காக வைத்து, விடுதலைப் புலிகள் எழுச்சி பெறுவர் என்று பிரசாரப்படுத்த வியூகம் அமைத்துள்ளார்.
புலம்பெயர் தமிழர்கள் தமது தாய் நாட்டுக்கு வருவதை விடுதலைப் புலிகளின் மீள் எழுச்சியுடன் தொடர்புபடுத்துகின்ற மகிந்த ராஜபக்ச, இந்த நாட்டில் இன ஒற்றுமை ஏற்படக் கூடாது என்பதில் மிகவும் உறுதியாக உள்ளார் என்பது தெளிவாகிறது.
எதுவாயினும், இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி என்பது புலம்பெயர் மக்களை விலத்தியதாக இருக்க முடியாது.
புலம்பெயர் இலங்கையர், அதிலும் குறிப்பாக புலம்பெயர் தமிழர்கள் வெளிநாடுகளில் குறிப்பிடத்தக்க பொருளாதாரபலத்தைக் கொண்டுள்ளனர்.
எனவே அவர்களின் பொருளாதார பலத்தை இலங்கை பயன்படுத்திக் கொள்வதன் ஊடாக இலங்கையில் அபிவிருத்தி ஏற்படுவதோடு அபிவிருத்தியின் ஊடாக இன ஒற்றுமை என்பதை உருவாக்க முடியும்.
ஆக, புலம்பெயர் தமிழர்களை தாய் நாட்டுக்கு வரவழைப்பதன் ஊடாக இலங்கையில் இன வேற்றுமை அறுபட வாய்ப்பு உண்டென்பதே உண்மை.
இருந்தும் முன்னாள் மன்னர் மகிந்தனார் புலிகள் மீண்டும் எழுச்சி பெறுவர் என ஒரு மோசமான கருத்தை நாட்டில் விதைக்கிறார்.
இதை வெட்டிச் சரிப்பது ஒவ்வொரு இலங்கையர்களினதும் தலையாய கடமையாகும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இலங்கையரை அச்சுறுத்திய பிரித்தானிய பொதுத்தேர்தல் வேட்பாளர் கட்சியிலிருந்து இடைநிறுத்தம்!
» ஜூன் மாத இறுதியில் கலப்பு முறையில் பொதுத்தேர்தல்! தேசிய நிறைவேற்று சபை தீர்மானம்
» கனடா பொதுத்தேர்தல்! ஹரி ஆனந்தசங்கரி வெற்றி! ராதிகா உட்பட ஐவர் தோல்வி….!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum