Top posting users this month
No user |
காணாமல் போனோர் தொடர்பான விசாரணை இம்மாதம் திருகோணமலையில்!
Page 1 of 1

இலங்கையில் கடந்த காலத்தில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக காணாமற் போகச் செய்யப்பட்டோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதியின் ஆணைக்குழு தனது அடுத்த கட்ட அமர்வுகளை திருகோணமலையில் நடத்தவுள்ளது.
இத்தகவலை ஆணைக்குழுவின் இணைப்பு செயலாளர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன்படி இந்த மாதம் 27 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை திருகோணமலையில் பல இடங்களில் சாட்சியங்கள் திரட்டப்படவுள்ளன.
அத்துடன், திருகோணமலை மாவட்டத்தில் ஏற்கனவே பெற்றுக்கொள்ளப்பட்ட சாட்சியங்களிலுள்ள ஐயப்பாடு தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் இதன்போது ஆணைக்குழு கேள்வி எழுப்பவுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, மேற்படி ஆணைக்குழுவின் ஆயுட்காலம் அடுத்த மாதத்துடன் பூர்த்தியடையவுள்ள நிலையில் , அதன் பதவிக்காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாணைக்குழுவினால் இலங்கையில் இடம்பெற்ற உள்ளக போர்க்குற்றங்கள் தொடர்பில் ஒரு வருடமாக பெறப்பட்ட சாட்சியங்களை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட அறிக்கை அடுத்த மாத இறுதியில் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கபடவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum