Top posting users this month
No user |
Similar topics
சிவன் திருவடிவங்கள்:
Page 1 of 1
சிவன் திருவடிவங்கள்:
விலைரூ.110
ஆசிரியர் : சிவ.திருச்சிற்றம்பலம்
வெளியீடு: கங்கை புத்தக நிலையம்
பகுதி: ஆன்மிகம்
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
கங்கை புத்தக நிலையம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 288)
அருவம், உருவம், அருவுருவம் கொண்டவர் சிவபெருமான். ஒரு நாமம் ஓருருவம் இல்லார்க்கு ஆயிரம் திருநாமம் பாடி, வடிவமைத்துப் போற்றி மகிழ்வது சைவ வழக்கம். உலகம் முழுவதும் சிவலிங்க வழிபாடு நடைபெற்றதாக வரலாற்று ஆசிரியர்கள் சான்று பகர்கின்றனர்.
சிவ வடிவம் பற்றி தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டிருக்கும் செய்திகளை வரலாற்றுச் சான்றுகளுடன் ஆராய்ந்து தெளிந்து `சிவன் திருவடிவங்கள்' என்ற நூலைப் படைத்துள்ளார் நூலாசிரியர். சிவனைப் பற்றிய வடிவங்களைப் பல்வேறு நிலைகளில் செய்திகளோடு தொகுத்துக் கொடுத்து நூலைச் சிவக்களஞ்சியமாகவே செய்திருக்கிறார். இதை ஒரு வேள்வியாகவே செய்து முடித்து அதில் வெற்றி பெற்றுள்ளார்.
இந்நூலில் தேவார முதலிகளின் பாடல்கள் மட்டுமல்ல, மற்ற நாயன்மார்களின் பாடல்களையும் சான்று காட்டி, சிவ வடிவங்களின் பாடல்களையும் சான்று காட்டி சிவ வடிவங்களின் நிலைகளை விளக்கியிருக்கிறார். மேலும் வைணவ சமய இலக்கியங்களில் காணப்பெறும் சிவ வடிவ எடுத்துக்காட்டுகளையும், ஆழ்வார்களின் பாசுரங்கள், திருமூலர் திருமந்திரம், அருணகிரியாரின் திருப்புகழ், சமண இலக்கியங்களில் சிவன், கம்பன் காட்டும் சிவன், வில்லி கூறும் சிவன், பிரபந்தங்கள் ஆகியவற்றைக் கூறி சிவ சம்பந்தத்தைத் தெளிவாக விவரித்திருக்கிறார். சிறந்த நூல்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum