Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அடுத்த ஐ.நா.செயலாளர் நாயகம், கிழக்கு ஐரோப்பிய பெண்ணா? - ச. வி. கிருபாகரன்

Go down

அடுத்த ஐ.நா.செயலாளர் நாயகம், கிழக்கு ஐரோப்பிய பெண்ணா? - ச. வி. கிருபாகரன் Empty அடுத்த ஐ.நா.செயலாளர் நாயகம், கிழக்கு ஐரோப்பிய பெண்ணா? - ச. வி. கிருபாகரன்

Post by oviya Sun Jun 14, 2015 1:05 pm

1945ம் ஆண்டு ஓக்டோபர் மாதம் 24ம் திகதி உதயமாகிய ஐக்கிய நாடுகள் சபையில் தற்போதைய நிலையில், இரு பார்வையாளர் நாடுகள் உட்பட எல்லாமாக 195 நாடுகளை கொண்டுள்ளது.

ஆனால் சுதந்திரமான சில நாடுகள,; சில அரசியல் காரணங்களினால் ஐ. நூ. அங்கத்துவம் அற்ற நிலையில் காணப்படுகின்றன. ஐ.நா.வில் பார்வையாளர் அந்தஸ்தை கொண்டுள்ள வாத்திகானிற்கும், பலஸ்தீனியத்திற்கும் இச் சபையில் வாக்குரிமை கிடையாது.

இவ் அமைப்பின் செயலாளர் நாயகம் பதவி முதல், சகல முக்கிய பதவிகளும் பிராந்திய அடிப்படையிலேயே தெரிவு செய்யப்படுகின்றது.

இவ் அடிப்படையில் ஐ.நா.வில் அங்கம் வகிக்கும் நாடுகளை, ஐந்து பிராந்திய குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன – ஆபிரிக்கா, ஆசியா பசுபிக், லத்தின் அமெரிக்கா கரிபியன் (தென் அமெரிக்கா நாடுகளும் தீவுகளும்), மேற்கு ஐரோப்பாவும் மற்றையதும், கிழக்கு ஐரோப்பா என்பனவாகும்.

இவற்றில் மேற்கு ஐரோப்பாவும் மற்றையதும் தவிர்ந்த ஏனைய நான்கு பிராந்திய குழுக்களும், அவர்களது பிராந்தியங்களுக்கு உள்ள நாடுகளை உள்ளடக்கியுள்ளது.

மேற்கு ஐரோப்பாவும் மற்றையதற்குள் - அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, துருக்கி, இஸ்ரேல் போன்ற நாடுகள் உள்ளடக்கப்பட்டுள்து. இதில் வியப்பிற்குரிய பல விடயங்கள் காணப்படுகிறது.

ஒன்று, அவுஸ்திரேலியா, நியூசிலாந்திற்கு அண்மையில், பசுபிக் சமுத்திரத்தில் உள்ள நாடான கிரிபால்டி ஆசியா பசுபிக் குழுக்களிற்குள் காணப்படும் அதேவேளை, ஆசியா அல்லது ஆபிரிக்காவிற்குள் காணப்பட வேண்டிய இஸ்ரேல், மேற்கு ஐரோப்பாவும் மற்றையதற்குள் சேர்க்கப்பட்டுள்ளது.

இவையாவும் ஐக்கிய நாடுகள் சபையின் கபடமான அரசியலை மிக எளிதாக காண்பிக்கின்றன.

1945ம் ஆண்டு ஓக்டோபர் மாதம் ஐ.நா. ஆரம்பிக்கப்பட்வுடன், பிரித்தானியவை சார்ந்த திரு கிளட்வின் ஜேப் என்பவர் தற்காலிக செயலாளர் நாயகமாக, நான்கு மாதங்கள் கடமையாற்றினார்.

1946ம் ஆண்டு பெப்ரவரி மாதம், நோர்வே நாட்டை சார்ந்த திரு. றைஜிவி லை என்பவர், ஐ.நா.வின் முதலாவது செயலாளர் நாயகமாக தெரிவு செய்யப்பட்டார்.

ஆனால் இவரது இராண்டாவது தவணையை நீடிப்பதற்கு, அன்றைய சோவியத் யூனியன் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக இவரது பதவி 1952ம் ஆண்டு முடிவிற்கு வந்ததை தொடர்ந்து, சுவீடன் நாட்டை சார்ந்த டக் காயமார் அக்னீ என்பவர், 1953ம் ஆண்டு பதவி ஏற்றார். துரதிஸ்டவசமாக இவர் 1961ம் ஆண்டு ஓர் விமான விபத்தில் இறந்தார்.

இவரை தொடர்ந்து ஆசிய பிராந்தியத்தில் அன்றைய பார்மா, இன்றைய மியன்மார் நாட்டை சார்ந்த திரு யு. தான், செயலாளர் நாயகத்தின் பதவிக்கு நியமிக்கப்பட்டார். இவர் தொடர்ந்து பத்து ஆண்டுகள் 1971ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை கடமையாற்றினார்.

இதனை அடுத்து மீண்டும் மேற்கு பிராந்தியத்தின் ஆஸ்திரியா நாட்டை சார்ந்த் திரு குர்ட் வால்ட்கைம் என்பவர் நியமிக்கப்பட்டார். வால்ட்கைம் 1981ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை கடமையாற்றினார்.

ஆனால் வால்ட்கைம் ஐ.நா செயலாளர் நாயகம் பதவியிலிருந்து விலகிய பின்னர், தனது நாட்டின் ஜனதிபதிக்கு பதவிக்கு இரண்டாவது தடவையாக போட்டியிட்ட வேளையில், இவர் பற்றிய பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

வால்ட்கைம் ஹிட்லரின் ஜேர்மனிய இராணுவத்தில் சேவையாற்றிய வேளையில், யூதர்கள் மீதான பல கொடுரமான சம்பவங்களை அறிந்தவராகவும் அவற்றில் சம்பந்தப்பட்டவராகவும் குற்றம் சாட்டப்பட்டார். ஆனால் குர்ட் வால்ட்கைம் இவை யாவற்றையும் மறுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வால்ட்கைமின் பதவி காலம் முடிவுற்றதும், இலத்தின் அமெரிக்கா கரிபியன் பிராந்தியத்தின் பேரு நாட்டை சார்ந்த திரு ஜவீர் பேரஸ் டி குலியார் என்பவர் ஐ.நா. செயலாளார் நாயகம் பதவிக்கு தெரிவாகி, தொடர்ந்து பத்து வருட காலம், 1991ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை கடமையாற்றினார்.

இதனை தொடர்ந்து ஆபிரிக்கா பிரந்தியத்தின் எகிப்து நாட்டை சார்ந்த திரு பூட்டஸ் பூட்டஸ் காலீ என்பவர் இப்பதவிக்கு தெரிவானார். ஆனால் இவரது இராண்டாவது தவணையை நீடிப்பதற்கு அமெரிக்க எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினால், பூட்டஸ் காலியின் பதவி, 1996ம் ஆண்டு டிசம்பர் மாதம் முடிவிற்கு வந்துள்ளது.

இவ்வேளையில் கானா நாட்டை சார்ந்த திரு கோபி அனான் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டு, மிக வெற்றிகரமாக தொடர்ந்து பத்து வருடங்கள், 2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை கடமையாற்றினார்.

இதனை தொடர்ந்து மீண்டும் சுழற்சி முறையில் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் தென் கொரியாவை சார்ந்த திரு பான் கீ மூன் அவர்கள் 2007ம் ஆண்டு ஜனவரி முதல் இன்று வரை பதவி வகித்து வருகிறார்.

இவரது பதவிக்காலம், 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் முடிவிற்கு வரவுள்ள காரணத்தினால், ஏற்கனவே அடுத்த செயலாளர் நாயகத்தின் பதவிக்கான நபர்கள், ஏற்பாடுகள், கதைகள், பேச்சுவார்த்தைகள், கிசு கிசுக்க ஆரம்பமாகிவிட்டது.

இவ் அடிப்படையில், ஐ.நா.ஆரம்பிக்கப்பட்டு இன்று வரை செயலாளர் நாயகமாக பதவி வகித்தவர்களை ஆராயுமிடத்து, இராண்டு முக்கிய விடயங்கள் தெளிவாகின்றன. முதலாவதாக ஐ.நா.செயலாளர் பதவியில் இன்றுவரை எந்தவொரு பெண்ணும் கடமையாற்றியது கிடையாது,

அடுத்து பூகோள ரீதியான சுழற்சி முறையில், இன்றுவரை எவரும், புதிய பிராந்தியமான, கிழக்கு ஐரோப்பிய பிராந்தியத்திலிருந்து இப்பதவியை வகித்தது கிடையாது. இவ்விரு விடயங்களும் உலகளவிய ரீதியில் தற்பொழுது மிகவும் முக்கியமான விடயங்களாக பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே கிழக்கு ஐரோப்பியர் சிலர் இவ்விடயமாக கொந்தளிக்க தொடங்கி விட்டனர். ஆகையால் இவ்விரு விடயங்களின் அடிப்படையில், அடுத்த ஐ.நா. செயலாளர் நாயகம், கிழக்கு ஐரோப்பியராக இருப்பது மட்டுமல்லாது, நிட்சயம் ஓரு பெண்ணாக இருக்க வேண்டும் என்பதே உலக நியாயவாதிகளின் அக்கறையும் கருத்தும்.

ஆண் ஆதிக்கம் கொண்ட இவ் உலகில,; ஒரு பெண் இப்பதவியை அடைவதற்கு, இப்பதவியில் கண்ணும் கருத்துமாக செயற்பட்டு வரும் ஆண்கள் வழிவிடுவார்களா?


ஐ.நா. பாதுகாப்பு சபையின் ஐந்து நிரந்தர அங்கத்தவர்களிடையே உள்ள புரிந்துணர்வு என்னவெனில், தமது நாடுகளிலிருந்து எவரையும் செயலாளர் நாயகம் பதவிக்கான போட்டிக்கும் தெரிவிற்கும் நியமிப்பதில்லை என்பது.

தற்போதைய செயலாளர் நாயகம் பான் கீ மூன் அவர்கள் தனது இரண்டாவது தவணையை 2012ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பித்துள்ள காரணத்தினால், அடுத்த செயலாளர் பதவிக்கான வேலைத்திட்டங்கள், அடுத்த ஆண்டு ஆரம்பிக்கப்படலாம்.

கடந்த செயலாளர் நாயகம் கோபி அனானை பொறுத்தவரையில், இச் செயலாளர் பதவி என்பது – அளவிற்கு மிஞ்சிய பொறுப்புக்கள், கடமைகள், பாரங்கள், குற்றச் சாட்டுகள், குறைகள் நிறைந்தவை. இதனால் செயலாளர் நாயகம் என்பவர் ஓர் ‘பலி கடவே’ என விபரித்துள்ளார்.

செயலாளர் நாயகத்திற்கான போட்டியாளார்கள்

இன்று வரை, கிழக்கு ஐரோப்பிய பிராந்தியத்தை சார்ந்த நான்கு பெண்களும், ஆறு ஆண்களும் இப்பதவிக்கான போட்டியில் கலந்து கொள்வதற்கான தமது விருப்பங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

பல்கேரிய நாட்டினுடைய முன்னாள் வெளிநாட்டு அமைச்சரும், யூனெஸ்கோ நிறுவனத்தின் இயக்குனர் நாயகமுமாகிய திருமதி ஈரினா போக்கோவா; லித்துவெனியாவின் ஜனதிபதி டலியா கிறிபாயகுசேற்; குரோசிய நாட்டின் உதவி ஜனதிபதி வானிசா பியுசிக்; பல்கேரியா நாட்டில் பொருளியலாளரும், வரவு செலவிற்கான ஐரோப்பிய ஆணையாளருமான கிறிஸ்ரலினா ஐவானோவா ஆகியோர் இப்பதவிக்கு போட்டியிடத் தயாராகும் கிழக்கு ஐரோப்பிய பெண்களாகும்.

இதேவேளை இப்பதவிக்கு போட்டியிடத் தயாராகும் ஆண்கள் வரிசையில் - சுலோவேனியா நாட்டின் முன்னாள் ஜனதிபதி திரு டனிலோ ருறோ, இப் பதவிக்கான போட்டிக்கு தம்மை தயார்படுத்துகின்றார்.

திரு டனிலோ ருறோ ஐக்கிய நாடுகள் சபையில் உதவி செயலாளர் நாயகம் உட்பட பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, சேபியா நாட்டின் முன்னாள் வெளிநாட்டு அமைச்சரும் ஐ.நா. பொதுச் சபையின் தலைவராக 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை கடமையாற்றிய வியூக் ஜெறிமிக்; கங்கேரி நாட்டின் இன்றைய ஜனதிபதி ஜனோஸ் ஆடார்; சுலோவாக்கிய நாட்டின் தற்போதைய உதவி பிரதமரும், வெளிநாட்டு அமைச்சருமான மிறோசிலவா லாஜ்கேக்; சுலோவாக்கியவின் மற்றுமொரு பிரதிநிதியான முன்னாள் வெளிநாட்டு அமைச்சரான ஜான் குபி ஆகியோர் செயலாளர் நாயகத்தின் பதவிக்கு போட்டியிடுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.

கிழக்கு ஐரோப்பியா பிராந்தியத்தில் உள்ள இவர்கள் தவிர்ந்த, மேற்கு ஐரோப்பாவும் மற்றைய குழுவிலிருந்து, ஐ.நா. அகதி ஆணையாளரும், முன்னாள் போத்துக்கலின் பிரதமருமான திரு அன்ரோனியோ குயாற்ராஸ்ற்; டென்மார்க்கின் தற்போதை பிரதமர் திருமதி கேலீ தோனிங் சிமிற்; ஆவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகியவற்றின் முன்னாள் பிரதமர்களான – கேவின் ருட்; திருமதி கேலன் கிளாக் ஆகியோரும் இப் பதவிக்கான போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர்.

உண்மையில், பூலோக சுழற்சி முறையில், ஒவ்வொரு பிராந்தியமும், குறைந்தது ஒவ்வொரு நாற்பது, ஐம்பது வருடங்களிற்கு ஒரு முறையே ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கான பதவியை அடைய முடியும்.ஆனால் மேற்கு ஐரோப்பிய நாடுகள் இப்பதவிக்கு மூன்று தடைவகள் தெரிவாகி கடமையாற்றியுள்ளதை நாம் காண முடிகிறது.

ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கான பதவிக்கான தெரிவை பொறுத்தவரையில், இன்று வரை, முன்னைய சோவியத் யூனியனும், அமெரிக்காவும் இரு தடவைகள் தமது வீற்றோ உரிமையை பாவித்துள்ளனர்.

1950ம் ஆண்டு சோவியத் யூனியன், நோர்வே நாட்டை சார்ந்த திரு. றைஜிவி லை என்பரது இரண்டாவது தவணை நீடிப்பதற்கு எதிராகவும்,1996ம் ஆண்டு, அமெரிக்கா எகிப்து நாட்டை சார்ந்த திரு பூட்டஸ் பூட்டஸ் காலீயின் தவணை நீடிப்பிற்கு எதிராகவும், தமது வீற்ரோ அதிகாரங்களை பாவித்துள்ளனர்.

ஆகையால் பாதுகாப்பு சபையின் ஐந்து நிரந்தர அங்கத்தவர்களை திருப்தி படுத்தும் வகையில் ஒருவரை ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பதவிக்கு தெரிவு செய்வது என்பது இலகுவான காரியம் அல்லா.

ஆகையால், உலகின் மிக முக்கியமான இவ் நிறுவனத்தில், பெண்களுக்கான சமஅந்தஸ்தும், பூகோள ரீதியான சம உரிமையும் கடைப்பிடிக்கப்படுமா என்பதை, அடுத்த செயலாளர் நாயகத்தின் தெரிவு உறுதி செய்யும்.


ஐ.நா. செயலாளர் நாயகங்கள்

பெயர் நாடு ஆரம்பம் முடிவு

பான் கீ மூன் - தென் கொரியா - ஜனவரி 2007 - இன்று வரை
கோபி அனான் - கானா - ஜனவரி 1997 - டிசம்பர் 2006
பூட்டஸ் பூட்டஸ் காலி - எகிப்து - ஜனவரி 1992 - டிசம்பர் 1996
ஜவீர் பேரஸ் டி குலியார் - பேரு - ஜனவரி 1982 - டிசம்பர் 1991
குர்ட் வால்ட்கைம் - ஆஸ்திரீயா - ஜனவரி 1972 - டிசம்பர் 1981
யு. தான் - மியன்மார் (பார்மா) - நவம்பர் 1961 - டிசம்பர் 1971
டக் காயமார் அக்னீ சுவீடன் - ஏப்ரல் 1953 - செப்டம்பர் 1961
றைஜிவி லை - நோர்வே - பெப்ரவரி 1946 - நவம்பர் 1952
கிளட்வின் ஜேப் - பிரித்தானியா - ஒக்டொபர் 1945 - பெப்ரவரி 1946
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum