Top posting users this month
No user |
அரசாங்கத்தினால் குற்றங்களை நிரூபிக்க முடியாது: மஹிந்தானந்த
Page 1 of 1

தற்போதைய அரசாங்கம் கடந்த ஆட்சியின் அமைச்சர்களை திருடர்கள் என குற்றம் சுமத்தினாலும் அந்த குற்றங்களை இதுவரை நிரூபிக்க முடியாத நிலை காணப்படுவதாக முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
நாவலபிட்டி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அலுவலகத்தில் கட்சி செயற்பாட்டாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தில் இருந்த அனைத்து அமைச்சர்களும் திருடர்கள் என குற்றம் சுமத்தப்பட்டுளள்து.
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ சதொசவில் கடன் பெற்று கொண்டார் என தெரிவித்து கைது செய்தனர்.பசில் ராஜபக்ச மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஆனால் இன்று அந்த குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க முடியாத நிலை தற்போதைய அரசாங்கத்திற்கு தோன்றியுள்ளது.
அவை அனைத்தும் அரசியல் பழிவாங்கல்களாகவே காணப்படுகின்றன.
ரணில் விக்ரமசிங்கவிற்கு இந்த நாட்டு மக்கள் ஆதரவு கொடுக்கவில்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு நாட்டு மக்கள் வாக்களித்தனர்.
ஆனால் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆட்சியமைப்பதற்கோ, ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமராவதற்கோ இந்நாட்டு மக்கள் வாக்களிக்கவில்லை.
எதிர்வரும் பொது தேர்தலில் மகிந்த ராஜபக்ச பிரதமராக முன்வந்தால், எமது அரசாங்கமொன்றை நிறுவ முடியும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த 100 நாள் வேலைத்திட்டத்திற்கு நாம் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கினோம்.
தற்போது அந்த 100 நாளும் முடிவடைந்து விட்டது.
கிராமம், நகரம் இரண்டையும் அபிவிருத்தி செய்ய வேண்டுமெனில், எதிர்வரும் பொது தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கமொன்றை அமைப்பதற்கு முடியும்.
அதற்காக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஏனைய கட்சிகள் இணைந்து எதிர்வரும் பொது தேர்தலில் இணைந்து செயற்படுதல் வெற்றிக்கான அடித்தளமாக அமையும் என முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சுட்டிக்காட்டியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum