Top posting users this month
No user |
புலம்பெயர் தமிழர்களின் மனங்களை வெல்ல வேண்டும்!
Page 1 of 1

வெளிநாடுகளில் புலம் பெயர்ந்துள்ள இலங்கையர் அனைவரும் மீளவும் நாட்டுக்கு வருகை தரவேண்டும். தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்களவர்கள் என்ற பேதம் பாராமல் அனைவரும் புலம் பெயர்ந்த இலங்கையர் என்ற வகையில் நாட்டின் ஐக்கியத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அழைப்பு விடுத்திருக்கின்றார்.
முன்னைய ஆட்சியின் போது திட்டமிட்டு சிலருக்கே பிரஜாவுரிமை வழங்கப்பட்டது. எனினும் தற்போது 2011ம் ஆண்டு இடைநிறுத்தப்பட்ட இரட்டைப் பிரஜாவுரிமையை வழங்கும் நடைமுறையை மீளவும் ஆரம்பித்துள்ளோம்.
எம்முடன் நீங்கள் இணைந்து செயற்படவேண்டும். ஜனநாயக உரிமைகள் என்ற அடிப்படையில் இலங்கை திருநாட்டின் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புலம்பெயர்ந்த 150 இலங்கையர்களுக்கு நேற்று முன்தினம் இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கப்பட்டது. வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் இட்டைப் பிரஜாவுரிமைக்கான சான்றிதழ்களை வழங்கி வைத்த பின்னர் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இந்தக் கருத்துக்களை தெரிவித்திருக்கின்றார்.
நாட்டில் மூன்று தசாப்தகாலமாக இடம்பெற்ற கொடூர யுத்தத்தையடுத்து வடக்கு, கிழக்கிலிருந்து தமிழ் மக்கள் பெருமளவில் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்திருந்தனர். நாட்டில் இருக்க முடியாத சூழல் நிலவியமையினால் கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட மேற்குலக நாடுகளுக்கு பெருமளவானோர் சென்றிருந்தனர். பல்லாயிரக்கணக்கானோர் இந்தியாவிற்கும் அகதிகளாக சென்றிருந்தனர்.
இவ்வாறு இந்தியா சென்றவர்களில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் இன்னமும் அகதி முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்.
2009ம் ஆண்டு மே மாதம் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து புலம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த நாட்டுக்கு திரும்ப விரும்பினார்கள். தமது சொந்த நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ளவும் பாதிக்கப்பட்ட தமது உறவுகளுக்கு உதவிக்கரம் நீட்டவும் அவர்கள் முன்வந்திருந்தனர்.
யுத்தம் முடிவடைந்ததையடுத்து அன்று ஆட்சியிலிருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத் தரப்பினர் புலம்பெயர்ந்த மக்கள் நாட்டின் அபிவிருத்திக்கு உதவ வேண்டுமென்று கோரிக்கை விடுத்திருந்தனர்.
தமது சொந்த நாட்டுக்கு திரும்பவும் சொந்த நாட்டை வளப்படுத்தவும் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் விரும்பியிருந்த போதிலும், அந்த மக்களின் மனங்களை வெல்வதற்குரிய நடவடிக்கைகளை முன்னைய அரசாங்கம் சீராக செய்யவில்லை. இதனால் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் நாடு திரும்ப விரும்பிய போதிலும், அதற்கான சூழல் ஏற்படுத்தப்படவில்லை.
புலம்பெயர்ந்த சில அமைப்புக்கள் மட்டும் முன்னைய அரசாங்கத்துடன் உறவுகளை வளர்த்துக்கொண்டனவே தவிர ஏனைய அமைப்புக்கள் முன்னைய அரசாங்கத்தின் மீது சந்தேகம் கொண்டமையினால் உறவுகளை பலப்படுத்த முயலவில்லை.
புலம் பெயர்ந்த தமிழர்கள், நாடு திரும்பும் போது அவர்கள் விமான நிலையத்தில் கைது செய்யப்படும் செயற்பாடுகளும் முன்னைய அரசாங்க காலத்தில் இடம்பெற்றிருந்தன. ஒரு பக்கம் புலம் பெயர்ந்த மக்கள் நாடு திரும்ப வேண்டும் என அழைப்பு விடுத்த முன்னைய அரசாங்கம் மறுபுறத்தில் அதற்கு எதிர்மாறான செயற்பாடுகளையே மேற்கொண்டு வந்தது.
புலம்பெயர்ந்த அமைப்புக்களின் ஊடாக விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் சர்வ தேச ரீதியில் தொடர்ந்து வருவதாகவும், இதனால் நாட்டுக்கு எந்நேரத்திலும் ஆபத்து விளையலாம் என்ற தோரணையிலும் அரசாங்கத் தரப்பினர் அரசியல் சுயநலம் கருதியும் கருத்துக்களை பெரும்பான்மை மக்கள் மத்தியில் விதைத்து வந்தனர். இதனால் பெரும்பான்மையின மக்கள் மத்தியில் புலம்பெயர்ந்த தமிழர்கள் தொடர்பில் சந்தேகமே நிலவிவந்தது.
கடந்த அரசாங்கக் காலத்தில் யுத்தம் முடிவடைந்ததையடுத்து புலம் பெயர்ந்த மக்களுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கப்பட்டது. இந்த நடைமுறை 2011 ஆம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டது. இதன் பின்னர் அரசாங்கத்தில் செல்வாக்கு மிக்கவர்களுக்கு மட்டுமே இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கும் நடைமுறை இருந்து வந்தது.
இதனால் புலம் பெயர்ந்த மக்கள் நாடு திரும்பி இரட்டைப்பிரஜாவுரிமை எடுக்க முடியாத சூழ்நிலையும் உருவாகியது. முன்னைய அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கையினால் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் வெறுப்படைந்திருந்தனர். நாட்டில் பாதிக்கப்பட்ட தமது உறவுகளுக்கு உதவுவதற்கு புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் விரும்பியிருந்தபோதிலும், அதற்கான சூழல் ஏற்பட்டிருக்கவில்லை.
தற்போது நாட்டில் புதிய அரசாங்கம் பதவியேற்றுள்ள நிலையில் புலம்பெயர் மக்களின் ஒத்துழைப்பைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவே தெரிகின்றது. இந்த விடயத்தில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உரிய வகையில் செயற்பட்டு வருகின்றார்.
அண்மையில் லண்டனில் அமைச்சர் மங்கள சமரவீர புலம்பெயர் தமிழர் அமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தையும் நடத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தென்னாபிரிக்காவின் ட்ரான்ஸ் ஃபர் மேசன் இனிஷியேட்டிவ் அமைப்பின் ஏற்பாட்டில் கடந்த சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் லண்டனில் விசேட சந்திப்பு இடம்பெற்றிருந்தது.
இந்த சந்திப்பில் நோர்வேயின் முன்னாள் அமைச்சரும் இலங்கைக்கான சமாதான தூதுவருமான எரிக் சொல்கெய்ம், தென்னாபிரிக்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் இப்ராஹிம் இப்ராஹிம், இலங்கைக்கான சுவிஸ் தூதரகத்தின் முன்னாள் சமாதான முயற்சிக்கான ஆலோசகர் மார்டின் சுஷேஞர், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன், உலகத் தமிழ் பேரவையின் மூலோபாய பயிற்சிப் பணிப்பாளர் சுரேன் சுரேந்திரன், நோர்வே ஈழத்தமிழர் அவையின் பிரதிநிதிகள், உலகத் தமிழர் பேரவையின் சிரேஷ்ட உறுப்பினர்கள், புலம்பெயர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளனர்.
இலங்கையில் நம்பிக்கையை கட்டமைத்தல், விரைவில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தல், வடக்கு, கிழக்கு தமிழர்களின் உடனடித் தேவைகள் குறித்து இந்த மாநாட்டில் ஆராயப்பட்டதாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் உலகத் தமிழர் பேரவையின் மூலோபாய பயிற்சிப் பணிப்பாளர் சுரேன் சுரேந்திரன் ஆகியோர் கூட்டாக விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் புலம் பெயர்ந்த தமிழ் அமைப்புக்களுடன் பேச்சுக்களை நடத்த முன்வந்துள்ளமை வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் மனங்களை வெல்வதற்கு அரசாங்கம் உரிய வகையில் நடவடிக்கை எடுக்குமானால் அதனை பாராட்டலாம்.
ஆனால் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுக்களை நடத்தி தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் விடயங்களுக்கு எதிர்மாறான செயற்பாடுகள் இடம் பெறுமானால் அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்த விடயத்தில் அரசாங்கமும் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இதய சுத்தியுடன் செயற்படவேண்டியது இன்றியமையாததாகும். இவ்வருட இறுதியில் இலங்கையில் புலம் பெயர் இலங்கையர்களின் நிகழ்வொன்றை நடத்துவதற்கும் வெளிவிவகார அமைச்சு திட்டமிட்டுள்ளதாகவும் அதன் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.
உண்மையிலேயே புலம்பெயர் தமிழர்களும் தமது நாட்டின் மீது தீராத பற்று வைத்துள்ளனர். ஆனால் அவர்களின் மனங்களை வெல்ல முன்னைய அரசாங்கம் முயலாமையே அவர்களின் ஒத்துழைப்பைப் பெறுவதற்கு தடையாக இருந்தது.
இந்த தடையை விலக்க இன்றைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால் நிலைமை மாறும் என்பது திண்ணம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum