Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அனைத்து நம்பிக்கையில்லாப் பிரேரணைகளும் ரத்தாகும்

Go down

அனைத்து நம்பிக்கையில்லாப் பிரேரணைகளும் ரத்தாகும் Empty அனைத்து நம்பிக்கையில்லாப் பிரேரணைகளும் ரத்தாகும்

Post by oviya Sat Jun 13, 2015 1:23 pm

அரசியலமைப்புச் சட்டத்தின் 20வது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட உடன் நாடாளுமன்றத்தை கலைக்க அரசாங்கம திட்டமிட்டுள்ளது.
இதனால், பிரதமர் உட்பட இரு அமைச்சர்ளுக்கு எதிராக எதிர்க்கட்சி முன்வைத்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான யோசனைகள் ரத்தாகி விடும் என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைத்துள்ள எதிரணி அரசியல் கட்சிகள் கடும் வெறுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.

திர்க்கட்சியினால் மூன்று நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் நாட்டில் புதிய நாடாளுமன்றம் தெரிவு செய்யப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளதால், இம்மாத இறுதிக்கு முன்னர் நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும்.

இதனடிப்படையில் எதிர்வரும் ஜூலை மாதம் விவாதத்திற்கு எடுக்கப்படவிருந்த நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை, ஏற்கனவே சபை நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை என்பன ரத்தாகிவிடும்.

இதனைத் தவிர அரசாங்கத்தின் முக்கிய அதிகாரிகளான இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன், லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் தில்ருக்ஷி விக்ரமசிங்க ஆகியோருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளும் செல்லுபடியற்றதாகி விடும் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.

எது எப்படி இருந்தாலும் பிரதமருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்திற்கு எடுப்பதை பின் நகர்த்தப் போவதில்லை என எதிர்க்கட்சியின் முக்கிய அரசியல்வாதி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் 9 பிரதியமைச்சர்கள் உட்பட 108 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum