Top posting users this month
No user |
முட்டை சாப்ஸ்
Page 1 of 1
முட்டை சாப்ஸ்
முட்டை - 4
தக்காளி - 6
சின்ன வெங்காயம் - 20
முழுபூண்டு - ஒன்று
பச்சைமிளகாய் - 4
பட்டை - ஒன்று
கறிவேப்பிலை - 2 கொத்து
எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
தனியாதூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
பெருங்காயதூள் - சிறிதளவு
தக்காளியை பொடியாக நறுக்கவும். சின்ன வெங்காயத்தை மிக்ஸியில் ஒரு சுற்றுக்கு மட்டும் அரைத்து தனியாக எடுத்து வைக்கவும். அதே போல் பச்சை மிளகாய், பூண்டு ஆகியவற்றையும் தனித்தனியாக அரைத்து வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும் கறிவேப்பிலை, பட்டை தாளிக்கவும்
பின்னர் பூண்டு, பச்சைமிளகாயை சேர்த்து சிறுதீயில் வதக்கவும்.
நிறம் மாற ஆரம்பித்ததும் சின்ன வெங்காய விழுதினை சேர்த்து வதக்கவும்.
அத்துடன் தூள் வகைகளை சேர்த்து வதக்கவும்.
பின்னர் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
அரை டம்ளர் தண்ணீர் விட்டு தக்காளி மசிந்து வரும் வரை சிறுதீயிலேயே வதக்கவும்.
அவித்த முட்டைகளை பாதியாக நறுக்கி வைக்கவும்.
ஒரு தட்டில் முதல் லேயராக சாப்ஸ் வைத்து அதன் மேல் முட்டைகளை கவிழ்த்தாற் போல் வைத்து அதன் மேல் மீதமுள்ள சாப்ஸையும் வைத்து அரைமணி நேரம் மசாலா ஊறும் வரை வைத்திருக்கவும்.
காஜர் ரைஸ் மற்றும் அனைத்து விதமான சாத வகைகளுக்கும் பொருந்தும். சாம்பார், ரசம் முதலிய குழம்பு வகைகளுக்கும் தொட்டுக் கொள்ள அருமையாக இருக்கும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum