Top posting users this month
No user |
Similar topics
20 தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்த இந்தியா திட்டம்?
Page 1 of 1

மியான்மர் எல்லையில் உள்ள மேலும் 20 தீவிரவாத முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்த இந்தியா திட்டம் வகுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தாக்குதல் திட்டத்தை மியான்மர் நாட்டுடன் இணைந்து கூட்டாக செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து விரிவாக ஆலோசித்து முடிவு எடுக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மியான்மர் செல்கிறார். இதனிடையே மியான்மர் நாட்டு எல்லைக்குள் புகுந்து தீவிரவாத முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்திய இந்திய ராணுவம் அதே போன்று தாக்குதலை பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீதும் நடத்தும் என பகீரங்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டெல்லி செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர் மியான்மரில் தீவிரவாத குழுக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இந்தியா மீது மறைமுகமாக தாக்குதல் தொடுக்கும் பாகிஸ்தான் உள்ளிட்ட அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும் என கூறினார். தேவைப்படும் நேரத்தில் இது போன்ற தாக்குதல் நடத்தப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூவும் இதே கருத்தை முன்வைத்துள்ளார். நாட்டின் பாதுகாப்புக்காக எத்தகைய நடவடிக்கையும் மத்திய அரசு எடுக்கும் என அவர் கூறியுள்ளார். இந்தியாவின் எச்சரிக்கையால் அதிர்ச்சியடைந்துள்ள பாகிஸ்தான் தாங்கள் ஒன்றும் மியான்மர் கிடையாது என்றும் எந்த நாட்டுக்கும் பதிலடி கொடுக்கும் திறன் தங்களுக்கு இருப்பதாகவும் கூறியுள்ளது.
இது பற்றி பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் சவுத்ரி நிசார் அலி கூறும்போது இந்தியா பகல் கனவு காண்பதாகவும் அதனை நிறுத்தி கொள்ளமாறு தெரிவித்துள்ளார். இதற்கிடையே மியான்மர் பகுதியில் இந்திய ராணுவத்தின் தாக்குதலை அசாம் முதலமைச்சர் தருண் கோகய் வரவேற்றுள்ளார்.
மணிப்பூரில் கடந்த வாரம் ராணுவ வாகனங்களை குறித்து நாகாலாந்து தீவிரவாதிகள் நடத்தி தாக்குதலில் 18 வீரர்கள் உயிரிழந்தனர். அதனை தொடர்ந்து அருணாச்சல பிரதேசத்தில் உள்ள ராணுவம் முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இரு இடங்களிலும் தாக்குதல் நடத்திய நாகாலாந்து வடகிழக்கு மாநில தீவிரவாதிகள் மியான்மர் எல்லைப்பகுதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து இந்திய ராணுவ கமாண்டோக்கள் அங்கு அதிரடி தாக்குதல் நடத்தினர். இதில் 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வட்டரக்க தேரர் மீது மீண்டும் தாக்குதல்! பொதுபல சேனா மீது குற்றச்சாட்டு
» யாழ் பல்கலையில் பிரமாண்டமான முறையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்த திட்டம்
» கிறிஸ்தவர்களின் மீது தாக்குதல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum