Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


எட்டு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பில் மக்கள் ஆர்ப்பாட்டம்

Go down

எட்டு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பில் மக்கள் ஆர்ப்பாட்டம் Empty எட்டு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பில் மக்கள் ஆர்ப்பாட்டம்

Post by oviya Thu Jun 11, 2015 3:07 pm

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட செங்கலடி –பதுளை வீதியில் உள்ள கிராம மக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடாத்தினர்.
மட்டக்களப்பு காந்திபூங்காவில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் மறுமலர்ச்சி குடும்ப தலைமைத்துவ பெண்கள் அமைப்பினால் இந்த ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட செங்கலடி –பதுளை வீதியில் உள்ள கிராமங்களான கித்துள், சர்வோதயநகர், உறுகாமம், தும்பாலைசோலை, கோப்பாவெளி, வெலிக்காகண்டி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மக்களே கலந்துகொண்டனர்.

இப்பிரதேசத்தில் அண்மைக்காலமாக எதிர்நோக்கப்பட்டுவரும் எட்டுக்கும் மேற்பட்ட பிரச்சினைகளை தீர்த்து வைக்குமாறு கோரியே இந்த ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டது.

காணாமல் போனோரை மீட்டுக் கொடுத்தல், காட்டு யானைகளைக் கட்டுப்படுத்துதல் (சர்வோதய நகர், கித்துள்), காணி அனுமதிப் பத்திரத்தை பெற்றுத் தருதல், வீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் (கித்துள்), உள் வீதிகளை புனரமைப்பு செய்தல் (கித்துள்) மலசல கூடப்பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தருதல், நிரந்தர குடிநீர் வசதி (சர்வோதய நகர்), பெண்களுக்கெதிரான துஸ்பிரயோகத்தை தடுத்து நிறுத்துதல் ஆகிய பிரச்சினைகளை தீர்த்துவைக்க உரிய அதிகாரிகள் நடவடிக்கையெடுக்க வேண்டும் என இங்கு வலியுறுத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் “போராடுவோம், போராடுவோம் எங்கள் தேவைகளுக்காக போராடுவோம்”,”அரசே கற்பை சூறையாடும் விசமிகளை தூக்கில்போடு”,அரசே காணி அனுமதிப் பத்திரத்தினைப் பெற்றுத்தா”,யானைப் பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுத்தா போன்ற வாசகங்களை தாங்கிய பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.

கடந்த காலத்தில் யுத்த சூழ்நிலையினால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்ட இப்பிரதேச மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளபோதிலும் அவர்களின் அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்படவில்லையென பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum