Top posting users this month
No user |
ரணில் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவது புண்ணிய காரியம்: பிரசன்ன ரணதுங்க
Page 1 of 1

ரணில் விக்ரமசிங்க தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவது நாட்டுக்கும் நாட்டின் எதிர்கால சந்ததிக்கும் செய்யும் புண்ணிய காரியம் என மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இதனால், மாத்தறையில் நாளை நடைபெறவுள்ள மகிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த வலியுறுத்தும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு சகல மக்கள் பிரதிநிதிகளிடமும் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
உண்மையான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எங்கு இருக்கின்றது என்பது நாளை நடைபெறும் கூட்டத்தில் உறுதியாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பி வைக்கும் இறுதி எச்சரிக்கை விளக்கு நாளைய கூட்டம் எனவும் நல்லாட்சி அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் மாபெரும் போராட்டம் பின்னர் ஆரம்பிக்கப்படும் எனவும் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.
மகிந்த ராஜபக்ச ஆதரவாளரான மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, நல்லாட்சி அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புமாறு கூறுகிறார். எனினும் இந்த அரசாங்கத்தில் அவரது சகோதரரான அர்ஜூன ரணதுங்க அமைச்சராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum