Top posting users this month
No user |
பெண்களிடம் நடத்தப்படும் இரு விரல் சோதனை தேவையா? அரசு விளக்கம்
Page 1 of 1

பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்களிடம் நடத்தப்படும் இரு விரல் சோதனை முறை குறித்த சுற்றறிக்கை சர்ச்சையை அடுத்து, சுகாதார அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான பெண்களின் கன்னித்தன்மையை சோதிக்கும் இரு விரல் சோதனை அறிவியல் பூர்வமற்றது என மத்திய சுகாதாரத் துறை தடை செய்துள்ளது.
கடந்த மே 31ம் திகதி, டெல்லி சுகாதார துறை அனுப்பிய சுற்றறிக்கையில், அடிப்படையான இச்சோதனையை விலக்கி வைப்பது பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்காமல் தடுக்கச் செய்யும்.
இதனால் குற்றவாளிகள் தப்பிக்கும் சூழல் ஏற்படும் என்பதால் பாதிக்கப்பட்ட பெண்ணின் சம்மதத்தோடு இரு விரல் சோதனை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பெண்கள் அமைப்பினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், டெல்லி சுகாதார அமைச்சகத்தின் சுற்றறிக்கை தவறாகப் புரிந்து கொள்ளப் பட்டுள்ளதாக மாநில சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் விளக்கமளித்துள்ளார்.
அவர் கூறுகையில், பலாத்காரத்துக்குள்ளான பெண்களுக்கான சிகிச்சை வழிகாட்டு நெறிகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.
இரு விரல் சோதனை பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளானவர்களிடம் நடத்தப்படக்கூடாது.
பலாத்காரத்தை உறுதி செய்ய வேறு சில அறிவியல் நடைமுறைகள் இருப்பதால் இரு விரல் சோதனை கூடவே கூடாது.
இருப்பினும், சிகிச்சையின் நிமித்தம் ஒரு மருத்துவக் குழு பரிந்துரைத்தால், இச்சோதனையை மேற்கொள்ளலாம் என்றுதான் குறிப்பிடப்பட்டிருந்தது என்று தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum