Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளது: எதிர்க்கட்சித் தலைவர்

Go down

அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளது: எதிர்க்கட்சித் தலைவர் Empty அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளது: எதிர்க்கட்சித் தலைவர்

Post by oviya Wed Jun 10, 2015 2:33 pm

அரசாங்கம் 100 நாள் வேலைத்திட்டத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற நிலையியற் கட்டளையின் அடிப்படையில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

100 நாள் திட்டத்தில் பல்வேறு நலன்களை மக்களுக்கு அளிப்பதாக இந்த அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்தது.

சமுர்த்தி கொடுப்பனவை 200 வீதத்தினால் உயர்த்துதல், 250000 ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்கள் அடகு வைக்கப்பட்டிருந்தால் அதற்கான வட்டி, அபராதப் பணத்தை ரத்து செய்தல், விவசாயிகளின் அனைத்து கடன்களையும் 50 வீதத்தினால் குறைத்தல், வயோதிபர்களுக்கான கொடுப்பனவுகளை கிரமமாக வழங்குதல் போன்ற பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்ட போதிலும் அவை நிறைவேற்றப்படவில்லை.

வயோதிபர்களுக்கு 2000 ரூபா வழங்குவதாக அறிவிக்கப்பட்ட போதிலும் இரண்டு மாதங்களாக வயோதிபர்கள் தபால் நிலையங்களில் அலைந்து திரிந்து வருகின்றனர். எனினும் பணம் கிடைக்கவில்லை.

தங்க நகை அடகு வைத்தல் தொடர்பிலான சலுகைத் திட்டம் இன்னமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என வங்கிகள் கூறுகின்றன.

அளிக்கப்பட்ட வாக்குறுதியின் அடிப்படையில் விவசாயிகளின் கடன்கள் வெட்டப்படவில்லை.

நாட்டில் பணத் தட்டுப்பாடு கிடையாது எனவும் போதியளவு பணம் இருப்பதாகவும் நிதி அமைச்சர் கூறுகின்றார்.

போதியளவு நிதி இருந்தால் திட்டங்களை அமுல்படுத்தவும், அல்லது அந்த திட்டங்களுக்கு பணம் பெற்றுக்கொள்ளும் முறைமையை தெளிவுபடுத்தவும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் நிதிக் கொள்கைகள் தெடார்பில் தெளிவான நிலைப்பாட்டை வெளிவுபடுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum