Top posting users this month
No user |
Similar topics
ஈரானிடமிருந்து எரிபொருள் கொள்வனவு: அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் முரண்பாடு
Page 1 of 1

ஈரானிலிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதற்கு அமெரிக்காவுக்கும், இலங்கைக்கும் இடையில் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள பொருளதார தடையே இதற்கு பிரதான காரணம் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
10 பில்லியன் பெறுமதியுடைய ஒரு மில்லியன் எரிபொருள் கொள்கலன்களை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஈரானிடமிருந்து கொள்வனவு செய்துள்ளதாகவும், குறித்த கப்பல் இன்னும் நாட்டை வந்தடையவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஈரானிடமிருந்து கொள்வனவு செய்யப்படுவதாக சந்தேகிக்கப்படும் குறித்த எரிபொருள் கப்பலை இலங்கை அனுமதிக்கக் கூடாது என அமெரிக்கத் தூதரகம், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் பி.எம்.எஸ். படகொடவிற்கு அறிவித்துள்ளது.
அத்துடன் மார்கஸ் எப் வேல் என்னும் கப்பலின் ஊடாக இந்த எரிபொருட்கள் கொண்டு வரப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஈரானிலிருந்து எரிபொருள் கொள்வனவு செய்யக்கூடாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு நன்றாகவே தெரியும். எனவே குறித்த எரிபொருள் கூட்டுத்தாபனம் ஏற்றுக்கொள்ள கூடாது என அமெரிக்க தூதரகம் அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது.
ஈரானிடமிருந்து எரிபொருள் கொள்வனவு செய்யப்பட மாட்டாது என கடந்த பெப்ரவரி மாதம் 6ம் திகதி இலங்கை அரசாங்கம், அமெரிக்காவுக்கு எழுத்து மூலம் உறுதியளித்துள்ளதாகவும் எரிபொருள் கொள்வனவு குறித்த தகவல்களை அமெரிக்கத் தூதரகத்துடன் பகிர்ந்துகொள்வதாகவும் உறுதியளித்திருந்தது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு இலங்கை அரசாங்கம் அறிவுறுத்தியுள்ள நிலையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஈரானிடமிருந்து எரிபொருள் கொள்வனவு செய்துள்ளது என அமெரிக்க தூதரகம் குற்றம் சுமத்தியுள்ளது.
குறித்த கப்பல் எந்த நாட்டு கொடியுடன் இலங்கைக்கு வரவுள்ளது என இலங்கை துறைமுக அதிகார சபை ஆலோசனைகளை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு பெற்றுக்கொள்ள வேண்டும் என அமெரிக்க தூதரகம் கோரியுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பல ஒற்றுமைகள்: மோடி
» மிக் விமான கொள்வனவு தொடர்பில் கோத்தபாயவிடம் விசாரணை
» மகிந்தவின் ஆட்சியில் 60 ஆயிரம் கணனிகள் கொள்வனவு: விசாரணைகள் ஆரம்பம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum