Top posting users this month
No user |
Similar topics
யுத்தத்தில் அங்கவீனமடைந்தவர்களுக்கு உதவுங்கள்!- மாற்று திறனாளிகள் அமைப்பின் தலைவர் கோரிக்கை
Page 1 of 1

கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தினால் அங்கவீனமடைந்து தங்களது வாழ்வாதாரத்திற்காக போராடிக் கொண்டிருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுமாறு மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தலைவரும் முன்னாள் போராளியுமான ஒளியன் என்றழைக்கப்படும் சி.பரமானந்தம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
லங்காசிறிக்கு வழங்கிய சிறப்பு பேட்டியில் அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தமாக 14 மாற்றுத்திறனாளிகள் அமைப்பு இயங்கி வருகின்றது.
அதில் சுமார் 7000ற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இதில் மிக முக்கியமாக முன்னாள் போராளிகள், பொதுமக்கள் எனப் பலரும் தங்களது நாளாந்த வாழ்வாதாரத்திற்காக போராடிவருகின்றனர்.
குறிப்பாக மருத்துவ வசதிகள், இருப்பிட வசதிகள், குடிநீர் போன்றவற்றை பெறுவதில் மிகுந்த சவால்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இவர்களுக்குரிய சில உதவித்திட்டங்களை அரசும், ஏனைய நிறுவனங்களும் செய்துவருகின்ற போதும், குறித்த மாற்றுத்திறனாளிகள் சுயமாக நிலைத்து நின்று தங்களுக்கான வாழ்வாதாரத்திற்குரிய வருமானத்தை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையிலான சுயதொழில் திட்டங்களை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் உட்பட புலம்பெயர் அமைப்புக்களும் முன்வரவேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன்.
மிக முக்கியமாக கடந்த காலங்களில் வடக்கு மாகாணத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் மீது செலுத்தப்பட்ட கவனத்தை கிழக்கில் உள்ள மாற்றுதிறனாளிகள் மீது செலுத்துவதற்கு புலம்பெயர் சமூகத்தினர் தவறியுள்ளனர்.
எனவே இனிவரும் காலங்களிலாவது கிழக்கில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவதற்கு புலம்பெயர் சமூகத்தினர் முன்வரவேண்டுமென இந்த சந்தர்ப்பத்தில் உரிமையுடன் வேண்டுகொள்விடுக்கின்றேன் என தெரிவித்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» 20ஐ நிறைவேற்ற உதவுங்கள்: கட்சிகளிடம் கோரிக்கை விடுக்கும் ஜாதிக ஹெல உறுமய
» யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை
» 8 மாதங்களாக சிறுநீரக மாற்று சிகிச்சைகளுக்கு தடை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum