Top posting users this month
No user |
ரஞ்சன் ராமநாயக்கவின் கொலை குற்றச்சாட்டை மறுக்கும் மஹிந்த
Page 1 of 1

சமூக சேவைகள், பொதுநல மற்றும் கால்நடை அபிவிருத்தி பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, சமீபத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீது கொலைக்குற்றச்சாட்டு ஒன்றை சுமத்தியிருந்தார்.
எனினும் அவருக்கு எதிரான முன்வைக்கப்பட்டுள்ள அந்த கொலைக் குற்றச்சாட்டை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மறுத்துள்ளார்.
கொலைச் சம்பவமொன்றுடன் மஹிந்தவிற்கு தொடர்பு இருப்பதாக, தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிடம் கூறியதாக ரஞ்சன் ராமநாயக்க அப்போது தெரிவித்திருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இவ்வாறான பிரச்சாரம் செய்யப்படுவதாக அவரது ஊடகப் பேச்சாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்ததாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ரஞ்சன் ராமநாயக்கவின் இந்த குற்றச்சாட்டில் எவ்வித உண்மையும் கிடையாது என மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார் எனவும் வெலிவிட்ட குறிப்பிட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் 20 ஆண்டுகளுக்கு முன்னதாக இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்துடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சம்பந்தப்பட்டிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறினார் என ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிடம் தனிப்பட்ட ரீதியில் இது தொடர்பில் குறிப்பிட்டார் எனவும், ஜனாதிபதியே இக்கொலைகளுக்கான முக்கிய சாட்சி எனவும் ரஞ்சன் குற்றம் சுமத்தியிருந்தார்.
இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியில் மஹிந்த ராஜபக்சவிற்கு, ஜனாதிபதி பிரதமர் வேட்புரிமை வழங்காமைக்கு இதுவும் ஒரு காரணம் என ரஞ்சன் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ச குற்றச்சாட்டிலிருந்து விடுதலையாக தற்போதைய அமைச்சர் ஜோன் செனவிரட்ன ஒத்துழைப்பு வழங்கியிருந்ததாகவும் மைத்திரிபால சிறிசேன கூறியதாக ரஞ்சன் ராமநாயக்க கடந்த வாரம் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் யாருக்கும் சந்தேகம் இருப்பின் நேரடியாக ஜனாதிபதியிடம் கேட்டுமாறும் ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டிருந்தார். எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்களை முன்னாள் ஜனாதிபதி முழுமையாக நிராகரித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum